தோண்டத் தோண்ட மண்ணு பூமியில்
தொடர்ந்து தோண்ட சகதியும் வரலாம்
பொறுமையும் சேர்ந்தால் பொன்னும் வரலாம்
வியர்வையில் வளரும் தேடல்
துருவத் துருவ எண்ணம் மனதில்
தொடர்ந்து துருவ தெளிவு வரலாம்
Tuesday, September 27, 2016
மனித முகம்
Vavar F Habibullah
வேதங்கள்,இதிகாசங்கள், புராணங்கள், நீதி நூல்கள் ஆன்றோர் சான்றோர் சொற்கள் கலி காலத்தில் பயனற்று போய் விட்டன.
நீதி, நேர்மை,நியாயம் என்பதெல்லாம் சொல் அலங்காரம் ஆகி விட்டது.செயற்கை பூக்களில் வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
மனித மனங்கள் இறுகி விட்டன.
அதை முகங்கள் பிரதிபலிக்கின்றன.
புன்சிரிப்பும் பொல்லாங்கு பேசுகிறது.
உண்மைகள் ஊமைகளாகி விட்டன.
பொய், புரட்டு, திருட்டு, குடி, கற்பழிப்பு, கொலை,
வன்முறை எல்லாம் சடுகுடு விளையாட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டு வெகு நாட்களாகி விட்டன.
மனித முகங்களில் இருள் சூழ்ந்து விட்டதால் அருள் படர்வது தடை செய்யப்பட்டு விட்டது.
Wednesday, September 21, 2016
சிரிய உள்நாட்டுப்போரால் ஐம்பது லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.
முப்பதாயிரம் சிரிய அகதிகளை கேனடா ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உள்ளூர் குழுக்களின் நிதி உதவியோடு மறுவாழ்வளிக்கப்படுகிறார்கள்.
தம்பி வா! தலைமை ஏற்க வா!!
Vavar F Habibullah
ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ் போன்று அரசியல்வாதி அல்லது அரசியல் தலைவர் ஆவதற்கு தகுதி நிர்ணயம் செய்ய இயலுமா?
அவ்வாறு தகுதி தேர்வு வைத்தால் நம் தலைவர்கள் தேறுவார் களா!
ஒரு பயிற்சி அரங்கத்தில் ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வித்தான் இது.
'உடோபியா' என்ற சர்வ சுதந்திரம் வாய்ந்த ஒரு நாட்டை உருவாக்குவது பற்றி, தாமஸ் மூர் ஒரு நூலில் எழுதி வைத்தான்.அதற்கு செயல்வடிவம் கொடுக்க எந்த அரசியல்வாதி யும் தயாராக இல்லை.
மனிதன் உடலா இல்லை மனமா? அரசனும் ஆண்டியும் மனரீதியாக வேறுபடலாம். ஆனால் உடல் பலத்தில் அவ்வாறு இல்லை.
சில நேரங்களில் அரசர்களை விட ஆண்டிகள் உடல் பலத்துடன் விளங்குகிறார்கள்.
வீரனின் இலக்கணம் என்ன?
மனிதன்.....!
காட்டாற்று வெள்ளத்தில் விழுந்த
மழைத்துளியாய்
வற்றாத ஆசைக் கடலில்
சங்கமிக்கிறான்
எதிர்த்தாலும் எம்பினாலும் எழுந்து
வரமுடியாமல்
ஆர்ப்பரித்த அலைகளில் அடங்கிப்
போகிறான்
மழைத்துளியாய்
வற்றாத ஆசைக் கடலில்
சங்கமிக்கிறான்
எதிர்த்தாலும் எம்பினாலும் எழுந்து
வரமுடியாமல்
ஆர்ப்பரித்த அலைகளில் அடங்கிப்
போகிறான்
Tuesday, September 20, 2016
சொல்ல மறந்த வரலாறு (பாகம் – 1)
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று
என்பது வள்ளுவன் வாக்கு. ஏதோ பிறந்தோம்; ஏனோ வாழ்ந்தோம்; ஏதும் செய்யாமல் மடிந்தோம் என்றில்லாமல் வாழ்க்கையின் மகத்துவத்தை உண்மையாய் உணர்ந்து, வரலாற்று சாதனை நிகழ்த்துபவனே இவ்வையகத்தில் பிறந்த பயனை முழுவதுமாக அடைகின்றான்.
வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
என்று கண்ணதாசன் தன் பாட்டிலே வினா தொடுப்பான். இரண்டு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரும் இன்றளவும் எல்லோர் மனதிலும் நிலைத்திருக்கும் ஒரு மாமனிதனின் பூர்வீகம் நாகூர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
என்ற கவிஞர் வாலியின் வரிகளை மெய்ப்பிக்கும் ஒருவர்தான் நம் கட்டுரையின் நாயகன்.
மின்சாரம் தூக்கி அடிக்குமா?
Shahjahan R
மின்சாரம் தூக்கி அடிக்குமா?
(இது அறிவியல்-தகவல் சார்ந்த பதிவு மட்டுமே. கமென்ட்களில் அரசியல் கலக்க வேண்டாம்.)பலருக்கும் இப்போது ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. “கரன்ட் ஷாக் அடிச்சு அப்படியே தூக்கி எறிஞ்சிருச்சு” என்கிறார்களே...? சில திரைப்படங்களில் மின்சாரம் தாக்கியவர் பறந்து போய் விழுகிறாரே? மின்சாரம் தாக்கினால் தூக்கி அடிக்குமா? பல்லால் கடிக்கும்போது தூக்கி எறிந்திருக்காதா?
பள்ளிப்படிப்பு முடித்து சில காலம் எலக்டிரீசியனுக்கு ஹெல்பராக வேலை செய்த அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிந்ததை விளக்குகிறேன். விவரம் அறிந்தவர்கள் மேலும் தகவல் தரலாம்.
Monday, September 19, 2016
தேரிழந்தூர் தாஜுதீன் வழங்கும் பாரத ரத்னா A.P.J.அப்துல் கலாம் நினைவேந்தல் (பகுதி -2)
தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி குருந்தகடு கொடுத்துதவிய தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு
மிக்க நன்றி.
Sunday, September 18, 2016
இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :
அப்துல் கையூம்
இசைமுரசு நாகூர் E.M.ஹனிபா அவர்களிடம் தந்தை பெரியாரைப் பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் தந்த பதிலும் :தந்தை பெரியாருடன் உங்களுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது?
"பெரியாரை நாகூருக்கு அழைத்து நான் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார், பெரியார். “அனிபா அய்யா பாட்டுக்கு ஒலிபெருக்கித் தேவையில்லை” என்பார். மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வரும்போது என்னை அழைத்து வரச்சொல்லி பாட வைத்துக் கேட்டு மகிழ்வார், பெரியார். சிலநேரம் என் பாட்டைக் கேட்டு, ஒரு ரூபாய் இனாம் கூடக் கொடுத்திருக்கிறார்."
ஆரம்ப காலத்தில் நாகூர் ஹனிபா அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பாடிய பாடல் இது:
புதியவழிகள் பிறக்கக் கண்டேன் ....!
பலமுறை முயன்றேன்
ஒருமுறையே வெற்றிவந்தது
பாடமாய் தக்கவைத்துக் கொண்டேன்.
ஒருவழி கண்டேன்
நல்வழி என்றானது
அவ்வழி நடந்தேன் என்றுமே.
வெற்றியும் தோல்வியும்
மாறிமாறியே வந்தன
பட்டறிவைப் பெற்றுத் தந்தன.
உண்ணாமல் உறங்காமல்
தேடலை தொடர்ந்தேன்
புதியவழிகள் பிறக்கக் கண்டேன்.
Thursday, September 15, 2016
"மீண்டும் பூக்கும்'' - ஜெ .பானு ஹாருன்
"மீண்டும் பூக்கும்'' - ஜெ .பானு ஹாருன்
அபு பப்ளிகேஷன்ஸ் -- தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ''மீண்டும் பூக்கும்'' நாவலை வெளியிட்டிருக்கிறது .
130 பக்கங்கள், விலை ரூ 70
நூல் கிடைக்குமிடங்கள் :
பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.
தொலைபேசி: 044 2522 5027 / 28
ஸலாமத் பதிப்பகம், சென்னை -1
தொலைபேசி: 044 42167320,
செல்: 9600012039
- ஜெ .பானு ஹாருன்
அபு பப்ளிகேஷன்ஸ் -- தன்னுடைய மூன்றாவது வெளியீடாக என்னுடைய ''மீண்டும் பூக்கும்'' நாவலை வெளியிட்டிருக்கிறது .
130 பக்கங்கள், விலை ரூ 70
நூல் கிடைக்குமிடங்கள் :
பஷாரத் பப்ளிஷர்ஸ், சென்னை -1.
தொலைபேசி: 044 2522 5027 / 28
ஸலாமத் பதிப்பகம், சென்னை -1
தொலைபேசி: 044 42167320,
செல்: 9600012039
- ஜெ .பானு ஹாருன்
Tuesday, September 13, 2016
Saturday, September 10, 2016
கேட்டேன். ...!
வற்றாத மதியை
கேட்டேன்
வறுமையற்ற வாழ்வை
கேட்டேன்
செருக்கற்ற சிரசைக்
கேட்டேன் ்
தெளிந்த மனத்தைக்
கேட்டேன்
நேர்கொண்ட பார்வை
கேட்டேன்
வெளிநாட்டில் கருகும் இளமை ....!
ராஜா வாவுபிள்ளை
இளமையின் வலிஇங்கே விளைகிறது
*** பகலிரவு பார்க்காமல் உழைக்கிறது
பலனை எண்ணியே விழைகிறது
*** நேரம்காலம் இல்லாமல் விரைகிறது
சுயநலம் மறந்தே இறங்கியது
*** சுமைகளை தனியாக சுமக்கிறது
மனைநலம் ஒன்றே குறியானது
*** தன்னலம் தவிர்த்தே தனித்தது
மட்டி வாழைப்பழமும் பின்னே உகாண்டாவும் ....!
ராஜா வாவுபிள்ளை
முக்கனிகளில் முக்காலமும் உலகெங்கிலும் கைக்கு எட்டிய தூரத்தில் கிடைத்து எல்லோராலும் விரும்பி உண்ணப்படுவது வாழைப்பழம்.
வாழைப்பழங்களில் பலவகைகள் கிடைகின்றன. மிகஅதிக வகைகள் எங்கள் மாவட்டமான கன்னியாகுமாரி மாவட்டத்தில் விளைகிறது. அங்கிருந்து பல ஊர்களுக்கும் விற்பனைக்காக கொண்டுசெல்லப்படுகிறது.
அங்கு விளையும் பலவகைகளில் 'மட்டி' என்னும் ஒருவகை வாழையை வாழைகள் ராணி என்று நான் சொல்லுவேன், அதன் ருசியும் மணமும் அலாதியானது.
Tuesday, September 6, 2016
இது ஊனம்இல்லை ...
Abu Haashima
மழைச் சேற்றையும்
சாக்கடை சகதியையும்
சந்தனமாய் விரித்துக் கொண்டும்
பக்கத்து பூக்கடைகளின்
வாசத்தை
காற்றின் கரங்களால்
களவாடி பூசிக்கொண்டும்
கலகலப்பாய்
கச்சோடம்
நடத்திக் கொண்டிருந்தது
கம்பளம் பஜார்!
பேருந்துகளும்
எண்ணற்ற வாகனங்களும்
ஊர்ந்து செல்லும்
கம்பளக் கடைவீதியில்
மேனகாவின்
செல்ல நாய்கூட
நாலு கால்களால்
நிமிர்ந்துதான் நடந்தது!
இடுப்புக்குக் கீழே
எதுவுமில்லாத
ஒருவன்
கம்பளத்து
சகதிகளில்
தவழ்ந்து வருவதைப் பார்த்து
"ஐயோ பாவம்...
இவன்...
நாயைவிட பாவம்"
என்று
வருத்தப்பட்டது மனது!
முகம்மது அலி
முகமதலி அண்ணன்.
சுடு சொற்களோ
கடுமொழிகளோ
கூறத்தெரியாத பண்பாளர்.
நல்லவைகளை மட்டுமே
உள்வாங்கத் தெரிந்த உத்தமர்.
முகமதலி அண்ணன் நமக்கெல்லாம் நண்பராக வாய்த்தது நட்புக்கு பெருமை !
அண்ணன் அவர்கள்
நீண்ட ஆயுளும்
நோய் நொடியில்லாத வாழ்வும் பெற்று
பல்லாண்டு சிறப்புற்று வாழ
வல்லோனாம் இறையை வேண்டுகிறேன்.
Abu Haashima
பாடல் பாடியவர் தேனிசைத் தென்றல்தேரிழ்ந்தூர் தாஜுதீன் அவர்கள் /
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness
http://nidurseasons.blogspot.in/2016/09/abu-haashima.html
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness
http://nidurseasons.blogspot.in/2016/09/abu-haashima.html
Monday, September 5, 2016
அமீரகம் – துபாய்
ஆறுநாடுகளை அற்புதமாய் அணிவகுக்கும் இணையில்லா இபன்பட்டுட்டா பேரங்காடி!
பாய்மரக்கப்பல் போன்று பார்வை பறிக்கும் புர்ஜ் அல் அராப்!
ஐரோப்பிய கட்டமைப்புடன் மிளிரவைக்கும் மெர்க்கடோ பேரங்காடி!
பாயும் வேகமும்,பாவையரின் நடனமும் பிரமிக்க வைக்கும் பாலைவன உலா!
கடல்பனைமரத்தின் நடுவே அட்டகாசமாக அமர்ந்திருக்கும் அட்லான்டிஸ்!
பாய்மரக்கப்பல் போன்று பார்வை பறிக்கும் புர்ஜ் அல் அராப்!
ஐரோப்பிய கட்டமைப்புடன் மிளிரவைக்கும் மெர்க்கடோ பேரங்காடி!
பாயும் வேகமும்,பாவையரின் நடனமும் பிரமிக்க வைக்கும் பாலைவன உலா!
கடல்பனைமரத்தின் நடுவே அட்டகாசமாக அமர்ந்திருக்கும் அட்லான்டிஸ்!
சீறிப் பாயும் தோட்டாக்கள்!
பிலிப்பைன்ஸ் நகர வீதிகளில் ‘டொப், டொப்’ என்று சரமாரியான துப்பாக்கி சப்தம். ‘தொப், தொப்’ என்று வீதியெங்கும் விழும் சடலங்கள். ஏதோ கேங்ஸ்டர் சினிமா படத்தின் சண்டைக் காட்சிகளின் ஷுட்டிங்கோ என்று பார்த்தால் நிசமான துப்பாக்கி! நிசமான ஷுட்டிங்! நிசமான சடலங்கள்!
‘ரோத்ரிகோ வந்துட்டேன்னு சொல்லு’ என்று பிலிப்பைன்ஸைத் தெறிக்க விட்டிருக்கிறார் ரோத்ரிகோ. அப்பேற்பட்ட ‘தாதாவா’ ரோத்ரிகோ என்று விசாரித்தால், ‘வாயைக் கழுவு. அவர் பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி’ என்கிறார்கள்!
ரோத்ரிகோ துதெர்தெ (Rodrigo_Duterte) பிலிப்பைன்ஸ் நாட்டின் 16ஆவது ஜனாதிபதியாக ஜுன் 30, 2016இல் பதவியேற்றார். அதற்குமுன் தாவோ (Davao City) எனும் நகரில் ஏழு முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 22 ஆண்டுகள் மேயராகப் பணிபுரிந்த பழுத்த, செல்வாக்குகள்ள அரசியல்வாதி ரோத்ரிகோ. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் திக்குமுக்காடும் அளவிற்கு மக்களின் ஆதரவு கிட்டி, தமக்கு அடுத்து நிலையில் இருந்த வேட்பாளரைவிட 66 இலட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, அவருக்கு அமோக வெற்றி.
அண்ணன் முகம்மது அலி .../ Abu Haashima
அண்ணன் முகமதலி அவர்களின் அன்பு நதியைப்போல ஜீவனுள்ளது.
நாம் அவரது பதிவை
ஷேர் செய்கிறோமா
லைக்கிடுகிறோமா
கமென்ட் பண்ணுகிறோமா
என்றெல்லாம் பார்ப்பதில்லை.
நம்முடைய பதிவுகள் அவருக்குப் பிடித்திருந்தால்
உடனே தனது வலைப் பக்கத்தில் பகிர்வார்.
பிரதிபலனை எதிர்பார்க்காமல்
" என் கடன் பணி செய்து கிடப்பதே " என செயலால் பேசுவார்.
நீடூரின் நெடும்புகழைச் சொல்ல
ஒருபாடு ஆட்கள் உண்டு.
முகமதலி அண்ணன்
நீடூரில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பள்ளிவாசல் கட்டுவது போன்ற புண்ணியங்களை அள்ளிக் கொண்டவர்கள் இவர்களின் பெற்றோர்.
மண்ணுலக மாந்தர் ....!
ராஜா வாவுபிள்ளை
குற்றங்குறை காணவே எத்தனிப்பர்
நிறைதனை முப்பொழுதும் நிந்திப்பர்
குறுகுறுக்கும் மனதுடன் அலைந்திடுவர்
உற்றாரென்றே உதட்டளவில் இயம்பிடுவர்
உறவுக்கு தோள்கொடுக்காதே தட்டிக்கழிப்பர்
பேராசைகொண்ட மண்ணுலக மாந்தர்
பொய்புரட்டு செய்வதிலே வல்லவர்
பொறுப்பின்றியே பொல்லாங்கு பேசிடுவர்
பொறாமையில் புரண்டு உழண்டிடுவர்
Sunday, September 4, 2016
அறியப்பட வேண்டிய நண்பர் அப்துல் கபூர் .
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அப்துல் கபூர்.
அப்துல் கபூர் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அப்துல் கபூர். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
அப்துல் கபூர். அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரதுAbdul Gafoorஆக்கங்களை முகநூலில் https://www.facebook.com/gafoorfahim
பக்கத்தில் பார்க்கலாம் .
அப்துல் கபூர்.அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அறியப்பட வேண்டிய நண்பர் அப்துல் கபூர் ...
அப்துல் கபூர் ...பற்றிய சில தகவல்கள்
அப்துல் கபூர் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் அப்துல் கபூர். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
அப்துல் கபூர். அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை .அவைகள் பலவற்றை நமது வலைப் பூவிலும், வலைதளத்திலும் வெளியிட்டு மகிழ்ந்துள்ளோம்
அவரதுAbdul Gafoorஆக்கங்களை முகநூலில் https://www.facebook.com/gafoorfahim
பக்கத்தில் பார்க்கலாம் .
அப்துல் கபூர்.அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அறியப்பட வேண்டிய நண்பர் அப்துல் கபூர் ...
அப்துல் கபூர் ...பற்றிய சில தகவல்கள்
Saturday, September 3, 2016
வண்ணமிகு அலங்கார மேடைகளில் ..
Raheemullah Mohamed Vavar
ஆயின்........
அறிதல் என்பது ஒரு தொடர் ../அறிவு எத்தனை வகைப்படும் ...
அறிதல் என்பது ஒரு தொடர்
ஆதியும் அல்லாத அந்தமும் அல்லாத
ஓர் உயிர்த் தொடர்
மிகச் சிறிய எண்ணும் இல்லை
மிகப்பெரிய எண்ணும் இல்லை
அறிவும் அவ்வண்ணமே
*
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
என்பதெல்லாம் கவிதை.
நயம் கருதி உருவாக்கப்படுவது.
சுவாரசியம் கருதி எழுதப்படுவது.
ஒன்றின் துக்கத்தையும் துயரத்தையும் சொல்லும்போது இப்படியான அதீத உணர்ச்சியைக் கொட்டுவது.
அது ஒரு கலை. அவ்வளவுதான் அந்தக் கலையும் அறிவுதான். ஞானம் இல்லை.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
என்றால் மனித வாழ்வு நிலையானதில்லை என்றுதான் பொருள், ஆனால் மனிதவாழ்வே பொய் என்பது விரக்தியின் உச்சக்கட்டம்
*
யூகங்களால் கணிக்கப்படுவதை ஞானம் என்று சொல்வார்களேயானால் அது பிழை. அதுவும் அறிவுதான்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவற்றை உருவாக்கிப் பார்க்கும் அறிவு
இப்படி நடந்திர்ந்தால் அப்படி நடந்திருக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் கூடச் செய்யக்கூடியது
மூளையின் வீச்சம் எட்டுத் திக்கல்ல எண்ணாயிரம் திக்குகளில் எகிறிப் பாயும்.
*
ஆதியும் அல்லாத அந்தமும் அல்லாத
ஓர் உயிர்த் தொடர்
மிகச் சிறிய எண்ணும் இல்லை
மிகப்பெரிய எண்ணும் இல்லை
அறிவும் அவ்வண்ணமே
*
காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
என்பதெல்லாம் கவிதை.
நயம் கருதி உருவாக்கப்படுவது.
சுவாரசியம் கருதி எழுதப்படுவது.
ஒன்றின் துக்கத்தையும் துயரத்தையும் சொல்லும்போது இப்படியான அதீத உணர்ச்சியைக் கொட்டுவது.
அது ஒரு கலை. அவ்வளவுதான் அந்தக் கலையும் அறிவுதான். ஞானம் இல்லை.
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
என்றால் மனித வாழ்வு நிலையானதில்லை என்றுதான் பொருள், ஆனால் மனிதவாழ்வே பொய் என்பது விரக்தியின் உச்சக்கட்டம்
*
யூகங்களால் கணிக்கப்படுவதை ஞானம் என்று சொல்வார்களேயானால் அது பிழை. அதுவும் அறிவுதான்.
இருப்பதைக் கொண்டு இல்லாதவற்றை உருவாக்கிப் பார்க்கும் அறிவு
இப்படி நடந்திர்ந்தால் அப்படி நடந்திருக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் கூடச் செய்யக்கூடியது
மூளையின் வீச்சம் எட்டுத் திக்கல்ல எண்ணாயிரம் திக்குகளில் எகிறிப் பாயும்.
*
பத்துப் பதினைந்து நிமிட ஆற்றொழுக்கான உரை,
நிஷா மன்சூர்
பத்துப் பதினைந்து நிமிட ஆற்றொழுக்கான உரை,மூன்று முக்கிய அம்சங்களை கருவாக எடுத்துக்கொண்டு அவற்றை எளிமையாக விளக்கி அவற்றையும் விழாவையும் தொடர்பு படுத்தி உலகம் வாழ்க்கை,ஞானம்,உடல்நலம் சார்ந்த மேற்கோள்களை ஆங்காங்கே ஹைலைட் செய்து இடையில் இரண்டு குட்டிக்கதைகள் சொல்லிப் பேச்சை முடித்தபோது கூடியிருந்தவர்களின் கைதட்டல் ஓய ஒருநிமிடமாயிற்று.பேச்சுக்கிடையில் இரண்டு முறை மக்கள் உரக்கச் சிரித்திருந்தனர் மூன்று முறை கைதட்டியிருந்தனர்.
அமர முற்படுகையில் விழாத் தலைவர்"அருமையாப் பேசினீங்க அண்ணே" என்று கட்டியணைத்துக் கொண்டார்.விழா நிகழ்வுகளைத் தொகுத்துக் கொண்டிருந்த பெண்மணி"பாய் என்ன பேசிடப்போறாருன்னு நினைச்சுட்டிருந்தேன் சார்,திருமூலர் சிவவாக்கியர் குணங்குடி நபிகள்நாயகம் ஓஷோ வேதாத்திரி மகரிஷி குட்டிக்கதைன்னு ரவுண்டு கட்டி அடிச்சுட்டீங்க....சூப்பர் சார்"என்றார்.
Friday, September 2, 2016
சற்றே உறங்கட்டும்
Fakhrudeen Ibnu Hamdun
செல்லப் பெண்ணவளும்
சற்றே உறங்கட்டும்
மெல்ல தாலாட்டி
மெத்தை கிடத்திவிட்டு
நில்லாப் பொழுதினிலே
நின்று ஆக்கிடுக
சொல்லும் கைமணத்தில்
சொக்கும் உங்களவர்
இல்லை என்றிடாமல்
இன்னொன்(று) அளித்திடுவார்
நல்லோர் வாழ்த்துவரே
நன்றாய் வாழ்ந்திடுக
(சகோதரி ஒருவருக்கு அளித்த வாழ்த்து)
Fakhrudeen Ibnu Hamdun
செல்லப் பெண்ணவளும்
சற்றே உறங்கட்டும்
மெல்ல தாலாட்டி
மெத்தை கிடத்திவிட்டு
நில்லாப் பொழுதினிலே
நின்று ஆக்கிடுக
சொல்லும் கைமணத்தில்
சொக்கும் உங்களவர்
இல்லை என்றிடாமல்
இன்னொன்(று) அளித்திடுவார்
நல்லோர் வாழ்த்துவரே
நன்றாய் வாழ்ந்திடுக
(சகோதரி ஒருவருக்கு அளித்த வாழ்த்து)
Fakhrudeen Ibnu Hamdun
சிணுங்கும் என்னவள் ...
J Banu Haroon
======================
சிணுங்கும் என்னவள் ....
செல்லப் பெண்ணவள் ....
தோளில் சாய்ந்தே ...
தூங்கிப் போகிறாள் ...
எடுத்துக் கிடத்தினால் ..
என் கைசூடு பற்றாமல் ...
ஏங்கியே அழுகிறாள் ...
என்ன செய்வேன் நான் ...
அவர் வரும் நேரம் ...
======================
சிணுங்கும் என்னவள் ....
செல்லப் பெண்ணவள் ....
தோளில் சாய்ந்தே ...
தூங்கிப் போகிறாள் ...
எடுத்துக் கிடத்தினால் ..
என் கைசூடு பற்றாமல் ...
ஏங்கியே அழுகிறாள் ...
என்ன செய்வேன் நான் ...
அவர் வரும் நேரம் ...
Thursday, September 1, 2016
யார் சொன்னாரோ.....! யார் சொல்வாரோ.....?
பொழுது புலர்ந்ததும்
இரைதேடி பறந்துசெல்ல
பறவைகளிடம் யார் சொன்னாரோ.....!
பாறை இடுக்கிலும்
வேர்விட்டு முளைக்க
மரங்களிடம் யார் சொன்னாரோ.....!
செடியில் மலர்ந்து
மனிதமனதை மகிழ்விக்க
பூக்களிடம் யார் சொன்னாரோ.....!
இரைதேடி பறந்துசெல்ல
பறவைகளிடம் யார் சொன்னாரோ.....!
பாறை இடுக்கிலும்
வேர்விட்டு முளைக்க
மரங்களிடம் யார் சொன்னாரோ.....!
செடியில் மலர்ந்து
மனிதமனதை மகிழ்விக்க
பூக்களிடம் யார் சொன்னாரோ.....!
Subscribe to:
Posts (Atom)