மருந்து, மாத்திரை தயாரிக்கும் நிறுவங்கள் தங்களது தயாரிப்பில் வரும் மருந்துகளை பரிந்துரைக்குமாறும், அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நிறுவனங்களின் சார்பில் பரிந்துரைக்கும் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ ‘சன்மானம்’ வழங்குகிறது என்ற செய்தி நாம் அன்றாடம் கேள்விப்படும் செய்திகளுள் ஒன்று தான்.
இலண்டன் நகரில் தலைமை அலுவலகம் கொண்டு செயல்படும். உலகின் மிகப்பெரும் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனமான GlaxoSmithKline பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சீனாவில் உள்ள மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் தங்கள் நிறுவனப் பொருள்களை பரிந்துரைக்கும்படியும், அதற்காக இலஞ்சம் கொடுத்ததும் ஆதாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
இதனை முறையாக விசாரித்த நீதிமன்றம், ஆதாரங்களைன் அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு 489 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்து தீர்பெழுதியுள்ளது.
மேலும் அந்நிறுவனத்தின் மேலதிகாரி மார்க் ரெய்லி உட்பட பிற மேலாளர்கள் 4 பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின் நல்லெண்ண அடிப்படையில் மேலாளர்களின் தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது, எனினும், ரெய்லி நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, GlaxoSmithKline நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளதுடன், இதுபற்றி விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சீனாவின் கார்ப்பொரேட் வரலாற்றிலேயே இதுதான் அதிகபட்ச அபராதத்தொகை என்று தெரிகிறது. இப்பெரும் தொகையினால் GlaxoSmithKline
நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பணிகள் நிதிப்பற்றாக்குறையால் பாதிப்படையும் என்றும், இதை ஈடுசெய்ய நிறுவனம் ஐந்து ஆண்டுகள் போராட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம், சீனாவில் வர்த்தகம் புரியும் இதர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும், நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்ளும் என்றும் நம்பபடுகிறது.
பின் குறிப்பு:- இந்த GlaxoSmithKline நிறுவனம் இதுபோல அபராதம் பெறுவது என்பது இது ஒன்றும் முதல் முறையல்லவாம், ஏற்கனவே ஒருமுறை அனுமதியற்ற உபயோகத்திற்கு வழங்கியதற்காக அமெரிக்கா,
மூன்று பில்லியன் டாலர் அபராதம் விதிருக்கிறது.
சீனா சீனாதான்......ன்னு சொல்லுங்க!
சரி, நம்ம மீடியாக்கள் ஏதும் வாய் திறந்ததா இதுபற்றி??
No comments:
Post a Comment