Tuesday, September 16, 2014

அழைத்துச் செல்லலின் நோக்கம்



தாயை தன்னுடன் அழைத்துச் செல்லல் சேவை
தாய் தன் பிள்ளையை தன்னுடன் அழைத்துச் செல்லல் பாசம்

தந்தையை தன்னுடன் அழைத்துச் செல்லல் ஆணை
தந்தை தன் பிள்ளையை தன்னுடன் அழைத்துச் செல்லல் கடமை

காதலன் காதலியை தன்னுடன் அழைத்துச் செல்லல் அச்சாரம்
கணவன் மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்லல் அடிபணிதல்

சகோதரி சகோதரனோடு சேர்ந்து செல்லல் பாதுகாப்பு
நண்பன் நண்பனோடு சேர்ந்து செல்லல் பொழுதை மகிழ்விக்க


***********************************************

அம்மா அப்பா இருவரும் நாம் வர வழி வகுத்தவர்கள் . ஆனால் அம்மாவுக்கு நாம் முதல் இடம் தருவது இயல்பு . காரணம் அவள் பாசத்திற்காக ஏங்குபவள். தகப்பன் கெட்டலைந்து தாய் அவதிகுள்ளாகிய நிலை கண்ட பையன் மனமுருகி தாய் மீது வைத்துள்ள பாசம் அவனை செம்மையாகவும் சிறப்பாகவும் வளர வைக்கின்றது, அதே நேரத்தில் தாய் கெட்டவளாக இருந்துவிட்டால் தகப்பன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் அந்த குடும்பம் நன்றாக அமையாது..
அவர்களுக்காக எப்பொழுதும் இறைவனிடம் பிரார்த்திப்போம்,நாம் நன்றாக் இருக்க பெற்றோர்களின் பிரார்த்தனையை வேண்டி நிற்போம்

**************************************

No comments: