"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாமே"
"இல்லை சார், நாங்க முஸ்லிம்ஸ். நாங்க வட்டி கட்ட கூடிய லோன் வாங்க மாட்டோம். நிறைய வங்கிகள் எனக்கு போன் செய்து லோன் வேண்டுமான்னு நச்சரிக்கிறாங்க. நாங்க தான் வேண்டாம்னுட்டோம்"
"வட்டி வாங்க தான் கூடாது கொடுக்கவும் கூடாதா?"
"சார்... நாங்க வட்டி வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது, வட்டிக்கு கணக்கெழுதவும் கூடாது"
இந்த உடையாடல் நடந்தது ஈரோடு ஹெல்த் இன்ஸ்பெக்டருடன். எங்க தாஜ் மஹால் மசாலா இஞ்சி பூண்டு சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்ற தரச்சான்றன FSSAI முத்திரை பெறுவதற்காக ஹெல்த் டிபார்ட்மெண்ட்டுக்கு போயிருந்தேன்.
15 நாட்கள் கழித்து அவர் கேட்டபடி எல்லா டாகுமெண்ட்டும் தயார் செய்து கொடுத்த போது, காசு எதுவும் கொடுக்கணுமா என்றேன். அவர் உடனே மறுத்து,
"என்னம்மா நீங்க வட்டி ஆகாதுன்னு லோன் கூட வாங்க மாட்டேங்கிறீங்க, உங்க கிட்ட போய் காசு வாங்குவமா?" என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் ஞாபகம் வெச்சு இதை சொல்கிறாரே என்று. பாருங்க, நான் எதார்த்தமாக அவரிடம் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு எவ்வளவு பிடித்து விட்டதென்று...!
நேரில் எங்க ஃபேக்டரிக்கு விசிட் செய்தார். எல்லாமே அவருக்கு ரொம்ப திருப்தி. அப்ளிகேஷனில் என் குவாலிஃபிகேஷன் எழுதி தர வேண்டும். அதை பார்த்துவிட்டு, "இவ்வளவு படிச்சிருக்கீங்களே, டெட் எக்ஸாம் எழுதலாமே?" என்றார்.
நான் சொன்னேன், "சார் நான் இவ்ளோ படிச்சும் எம்ப்ளாய்மெண்ட் ஆஃபீஸ்ல கூட பதியலை சார். நாம இன்னொருத்தர்கிட்ட வேலை பார்ப்பதை விட நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும் என்றே நான் ஆசைப்பட்டேன் சார்"
என் பதில் அவருக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதே போல வேலை செய்யும் பெண்கள் தலைக்கு ஹிஜாப் போட்டு மறைத்திருப்பது, கையுறை அணிந்து வேலை செய்வது, தூசி உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கை, R.O. தண்ணீர் உபயோகிப்பது எல்லாமே அவர் திருப்தியாக உணர்ந்ததால், அப்ளிகேஷனை ஓக்கே செய்து கையெழுத்து வாங்கி சென்றுவிட்டார்.
போகும் போது நீங்க இன்னும் நல்லா வருவீங்க என்று வாழ்த்தியதோடு, உங்க FSSAI சர்டிஃபிகேட் வரும் முன்னாலேயே உங்க எண்ணை ஆன்லைனில் பார்த்து உங்களுக்கு ஃபோன் மூலம் தெரிவிக்கிறேன் என்று சொல்லி சென்றார்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு வாரத்தில் FSSAI நம்பர் வந்துவிடும். இது போல ஒரு கிலோ, அரை கிலோ என பெரிய பேக்கிங்கில் இஞ்சி பூண்டு பேஸ்ட் அரசாங்க சுகாதார சான்றிதழுடன் தமிழகத்தில் தயாரிக்கும் முதல் கம்பெனி என்ற பெருமை நமக்கே.
எல்லா புகழும் இறைவனுக்கே!!!
எம் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ள, பார்க்க & லைக் செய்க:
http://facebook.com/tajmahalmasala
Suhaina Mazhar Sumazla
****************************
பக்ரீத்தை முன்னிட்டு ஒரு கிலோ தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்கினால் 200 கிராம் பாக்கெட் இலவசம். இச்சலுகை 22 செப்டம்பர் முதல் 26 செப்டம்பர் வரை மட்டுமே. 30 கிலோ கொண்ட பாக்ஸாக எடுப்பவர்களுக்கு ஆஃபருடன் நம்ப முடியாத விலை கழிவு தரப்படும். விபரங்களுக்கு மெசேஜ் செய்யவும்.
பணம் செலுத்தி விட்டு மெசேஜில் அல்லது கமெண்ட்டில் உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் கொடுக்கவும். தொடர்புக்கு: 9488560231
************************************************
தாஜ்மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் சாம்பிள் பேக் உபயோகித்து வைத்த சிக்கன் ரோஸ்ட்
*****************************************
Taj Mahal Masala
#முந்திரி_சிக்கன்_கிரேவி
சிக்கன் அரை கிலோ
சின்ன வெங்காயம் ஒரு கப்
பட்டை கிராம்பு தூள் அரை ஸ்பூன்
தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட் 3 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தக்காளி 3
முந்திரி 50 கிராம்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவைக்கு
கொத்துமல்லி தழை சிறிது
எண்ணெய் காய்ந்ததும் தாஜ் மஹால் இஞ்சி பூண்டு மசாலாவை போட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கி பின் அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் சிக்கன் போட்டு, உடன் பட்டை கிராம்பு தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கி அதில் மிக்ஸியில் அடித்து வடிகட்டிய தக்காளி சேர்க்கவும்.
சிறிது நேரம் கொதித்து எண்ணெய் கக்கி வரும். முந்திரியை கால் மணி நேரம் சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்து அரைக்கவும். மல்லித்தூளுடன் சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும்.
கொதிக்கும் கிரேவியில் அரைத்த முந்திரி, மல்லித்தூள் கலவையை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி சிம்மில் வைத்து சிக்கனை வேக விடுங்கள். பின் கொத்துமல்லி தழை போட்டு அலங்கரித்து பரிமாறுங்கள்.
சுவையான முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.
குறிப்பு: தாஜ் மஹால் இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால் உப்பின் அளவை குறைத்து போடவும்.
****************
இஞ்சி பூண்டு பேஸ்ட் ' என்றால் சமைக்க பயன்படுத்துவது தான் பிரியாணிக்கு கூட இது தான் போடறாங்க . நாம் வீட்டில் அரைத்து வைப்போமே அது தான் இது. இதை இஞ்சி பூண்டு விழுது என்றும் சொல்லலாம்
Suhaina Mazhar
1 comment:
ஜஜாகல்லாஹைர் சகோ... இந்த பதிவு இட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...
Post a Comment