நேற்றிரவு ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்
எதிர் சீட்டில் இருவர்,அதிலொருவர் லேசான போதையுடனும் இன்னொருவர் லேசான சுயநினைவுடனும் இருந்தார்.லேசான போதைக்காரர் தோசைக்கு சாம்பாரா குழம்பா என்ற கேள்விக்கு சர்வரிடம் குழம்பு என்றார். கூட்டமாக இருந்த சமயமாதலால் வேகமாகப் பரிமாறிய சர்வரிடம்
"சிக்கன் குழம்பு,சிக்கன் குழம்பு" என்று உரக்கச்சொல்ல,
அவரும் பரிமாற. திடீரென்று சீட்டைவிட்டு எழுந்தார் மிதபோதையர்.
"ஏய்,நான் சிக்கன் குழம்பு வேண்டாம்னு சொல்லறேன்,
நீ பாட்டுக்கு ஊத்திட்டிருக்க....???? என்றார் உரக்க.
தடுமாறிய சர்வரோ,
"அண்ணே,சிக்கன் குழம்பு சிக்கன் குழம்புன்னுதான சொன்னீங்க,வேண்டாம்னு எப்பண்ணே சொன்னீங்க..??
"ஏய்,நான் சிக்கன் குழம்பு வேண்டாம்னுதாய்யா சொல்ல வந்தேன்,அதுக்குள்ளாற நீ ஊத்திட்ட.நான் சிக்கன் குழம்பெல்லாம் சாப்புடக்கூடாதுய்யா.....ஏய்யா இப்படிப் பண்ற...???? சரி சரி மட்டன் குழம்பிருந்தா ஊத்து.பாதிதோசையை வேஸ்ட் பண்ணிட்டயேய்யா...?"
என்று புலம்பியவாறே மீண்டும் சாப்பிட அமர, சர்வர் சொன்னார்,
"அண்ணே,எப்பவுமே எது வேணும்னு சொல்லப் பழகுங்கண்ணே,எதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டிருக்காதீய.நீங்க மட்டன் குழம்பு ஊத்தச் சொல்லீருந்தீயன்னா அழகா ஊத்திட்டுப் போறேன்." என்று.
"போய்யா,போ....." என்று சலித்துக்கொண்ட மிதபோதையரிடம் அருகிலிருந்த மிகைபோதையர் கேட்டார்,
"மாப்ள,மாத்திரை சாப்பிடறவன் மட்டன் குழம்பு மட்டும் சாப்பிடலாமாடா,விட்றா.....அப்புடிப்பாத்தா சரக்குகூடத்தான் அடிக்கக்கூடாதுன்னு வைத்தியர் சொன்னாரு, நாம அதயெல்லாம் கண்டுக்கிறமா என்ன..?? என்று.
உரக்கச் சிரித்த மிதபோதையர் சொன்னார்,
"சரக்கடிக்காம எப்டிறா மாப்ள இருக்க முடியும், அதெல்லாம் பாத்தா வாழவே முடியாது" என்று....!!
#வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது சரக்குதான் என்கிற பெருந்தத்துவத்தை உலகுக்கு உணர்த்திய உத்தம குடிமக்களையும்,ஊத்திக் கொடுக்கும் உன்னத அரசையும் எண்ணிப் புளகாங்கிதமடைந்தேன்
நிஷா மன்சூர்
நிஷா மன்சூர்
No comments:
Post a Comment