கடித இலக்கியம் என்றோர்
நட்சத்திர சங்கதி ஒன்று உண்டு!
அது வளமாக இருந்தக் காலம் போய்
இப்போது மங்கி தேய்ந்து வருகிறது.
டெலிபோனின் உபயோகப் பெருக்கமும்
ஈமெயில் பரவலும்
தளைத்து கிளைத்துவிட்ட இன்றையப் பொழுதில்
கடித இலக்கியம் நசிந்துவிட்டதில் வியப்பில்லை.
ஒரு காலக் கட்டத்தில்
ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு
அமர்க்களப்பட்ட
காதல் கடிதங்கள் கூட
இப்போதெல்லாம் அவ்வளவாக
உபயோகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
உலக மயமாக்கப்பட்ட காலக்கட்டமிது!
எல்லாமே துரிதம்...
எல்லாமே நேரடி ஆக்,ஷன்!
*
ஜவஹர்லால் நேரு, தனது மகள்
இந்திரா பிரியதர்ஷிணிக்கு
(இந்திரா காந்தி) எழுதியக் கடிதங்கள்/
அம்பேத்கார், பெரியாருக்கு எழுதியக் கடிதங்கள்/
புதுமைப்பித்தன், அவரது மனைவிக்கு எழுதியக் கடிதங்கள்/
சு.ரா., சிறையில் இருந்தவொரு ஆயுள்கைதிக்கு
எழுதியக் கடிதங்கள்/
சு.ரா., இலக்கிய நண்பர்களுக்கு எழுதியக் கடிதங்கள்/
கி.ரா., ரசிக மணிக்கு எழுதியக் கடிதங்கள்/
கல்யாண்ஜி, கலாப்ரியாவுக்கு எழுதியக் கடிதங்கள்/
முதலியன தொகுப்புகளாக வந்து
வாசகனின் வாசிப்பு நெகிழ்ச்சியை
இன்னொரு தளத்திற்கு நகர்த்தியது.
'த சண்டே இந்தியன்' என்றோர் தமிழ் இதழ்
சில வருடங்களாக வெளிவருவதை
நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
இதழ் தவறாமல் அதில்
முன்னால் உலக முக்கியப் புள்ளிகள்
எழுதிய விசயதானக் கடிதங்களை
தொடர்ந்து பிரசுரித்து வருகிறது!
இந்த வாரத்தில் கூட,(4-17oct,,2010)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,
பிராங்க்ளின், டி ரூஸ்வெல்ட்டுக்கு எழுதிய
கடிதம் பிரசுரமாகி இருக்கிறது.
'1940களின் ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தியி பெருக்கத்தில்
அதிக ஈடுபாடுகள் கொண்ட
செயல்பாடுகளைப் பேசுகிறது அது!'
தமிழின் அரியப் படைப்பாளியான மௌனி,
கவிஞர். கி.அ.சச்சிதானுக்கு எழுதியக் கடிதங்கள்
விரைவில் தொகுப்பாக வரயிருக்கிறது.
இப்படி, கலை இலக்கியம் சார்ந்தப் படைப்பாளிகளின்
கடிதத் தொகுப்புகளும் தொடர்ந்து வரவேண்டும். வரும்.
நம்ம ஆபிதீன்....
தனது நண்பர் ஒருவருக்கு
எழுதியக் கடிதங்கள் தொகுக்கப்பட்டு
சுமார் அறநூறுப் பக்க அளவில்
புத்தகமாய் வருவதற்கான
ஆயத்தப் பணிகள் தொடங்கிய நிலையில்....
சில காரணங்களால், தடைப்பட்டுப் போனது.
*
குறிப்பு:
2010-ல் எழுதிய கடித இலக்கியம் என்கிற
என் கட்டுரை ஒன்றில் இருந்து....
- தாஜ்
No comments:
Post a Comment