"முப்பத்தி ஒண்ணுனு சொல்றாங்க. இந்த வயசுல ஸ்ட்ரோக் வருமா?"
"இன்சோம்னியா இருந்தா வரும். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் உள்ள போட்ருப்பாங்க.அதான்."
"ஆமா அவன் தூங்கறதில்லன்னு வார்டன் சொன்னாரு. பி.பி ஏற்கனவே இர்ரெகுலராதான் இருந்துருக்கு"
"எத்தனை வருஷமாம்? ஆயுளா??"
"இல்ல தூக்கு"
"என்னடி சொல்ற. எந்தக் கேஸ் இது?"
"விழுப்புரம் பக்கத்துல ஒரு சின்னப் பொண்ணு, அந்தக் கேஸ் ஞாபகம் இருக்கா?"
"ஓ ஞாபகம் இருக்கு. அதுல தீர்ப்பு கொடுத்துட்டாங்களா?"
"ஆமா மூணு வாரம் ஆச்சு.. சனியன் ஸ்ட்ரோக்லையே செத்துருக்கலாம். இப்ப நாம இவனை என்ன பண்ணனும்? ட்ரீட் பண்ணித் தூக்குல போடறதுக்கு தயார்படுத்தணுமா? காமெடியா இல்ல? நான் ரிப்போர்ட்ல என்ன போடறதுன்னு கேக்கதான்டி கூப்டேன். இது உன்னோட ஏரியாவாச்சே... உன்கிட்டதான் காலைல ரிப்போர்ட் கலெக்ட் பண்ணிக்கச் சொல்லியிருக்கேன்... மார்ஷா லைன்ல இருக்கியா?"
"இருக்கேன்.. யோசிக்கறேன்.. நான் உடனே அங்க வர்றேண்டி"
"ஏய் இப்பவா? இது ஹோப்லெஸ்டி.. ஹி வில் கெட் இன்டு persistent vegetative state டுமாரோ. நீ தேவையில்லாம ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத"
"நீ எனக்காக ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுடி. இது மைல்ட் ஸ்ட்ரோக்காதான் இருக்கும்.தூங்காததால ஹீ இஸ் அன்கான்ஷியஸ். தின்னர் போடணும். ஹேவ் இட் ரெடி. நான் வர்றேன்"
"ஏய் என்னடி சொல்ற? ஒரு குழந்தைடி"
"இவன் அதப் பண்ணியிருக்க முடியாது? அதைப் பண்ணினவனுக்கு இன்சோம்னியா வராது"
"எப்டி சொல்ற"
"உனக்கு அந்தக் கேஸ் ஞாபகம் இருக்குல்ல? It was not a case of temporary insanity. ஐ வில் கம்"
(தொடரும்)
No comments:
Post a Comment