வலி சொல்ல வந்த இடத்தில்
வரிக்கு என்ன விதிமுறை
என்றாவது மாறுமா என் தலைமுறை!
கல்லாத கல்வியால்
கடல்கடந்து நாங்கள்;
சொத்தோடு சோகத்தையும்
சுமந்துக் கொண்டு வருடாவருடம்
எங்கள் வீட்டிற்கு!!
துக்கம் என்
தொண்டையை அறுக்க;
தோள்கொடுக்க எவருமுண்டோ என
இயக்கங்களை நான் நோக்க;
இல்லாதது கல்லாமை மட்டுமல்ல;
ஒடிந்துப் போன ஒற்றுமையும்தான்
எனப் புரிந்துக் கொள்வதற்க்குள்
புதுப் புது இயக்கங்கள்!!
எல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;
எல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய!!
அனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;
எடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்!!
மார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;
மாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு!
இனியாவது
கசப்புகளைக் காலாவதியாக்கி
கரம் கோர்ப்போம்
பகைத் தீர்ப்போம்!
உரமாகுவோம் தீனுக்காக;
உரையாட வேண்டாம் தீனிக்காக;
பக்கங்கள் நிரம்பிவிட்டன வீணுக்காக;
வெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக!!
ஒட்டியிருப்பது உதடுகளில் நம்
சகோதரனின் கறி;
இயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி!
வியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்
நமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்!
வழிக்காட்டுவோம்
வருங்கால தலைமுறைக்கு;
விட்டுவிட்டால்
வீதியில்தான் நிற்ப்போம்!
by யாசர் அரபாத் Yasar Arafat
என் பக்கம் http://itzyasa.blogspot.in
தூரல்கள்
கவிதைக்காக நான் பெரும் முயற்சியோ அல்லது இப்படிதான் கவிதை இருக்கும் என்று மற்றவர்களின் கவிதையைக் கண்டு அதைப்போல் மாதிரியோ எடுத்துக் கொண்டதுக் கிடையாது;எல்லாம் வல்ல இறைவனின் மாபெருங் கருணையால் என்னை அறியாமலே நான் கவிதை எழுத ஆரம்பித்தேன். நான் முதன் முதல் கவிதை எழுதும் போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
தொடக்கத்தில் நண்பன் ஒருவனுக்குப் போட்டியாக எழுத தொடங்கியது;பின் படிப்படியாக தோன்றியதை எல்லாம் எழுதத் தொடங்கினேன்.எந்த அளவிற்கு என்றால் எட்டு அல்லது ஒன்பது நாட்குறிப்பு (Diary) பிதுங்கும் அளவிற்கு.
பொய்யானக் கற்பனைக்கு அழகுப் பார்த்து கவிதை என்றுப் பெயர் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை;அது உண்மையில் அழகாய் இருக்கும் பட்சத்திலும் சரியே.எண்ணிலடங்கா உண்மை சம்பங்களும் சங்கடங்களும் இருக்கும் போது பொய்யின் பக்கம் போகவும் அவசியமில்லை.
பொதுவாகக் கவிதைகள் நிறைய எழுதினாலும் வெளிநாட்டுச் சோகம் சம்பந்தப்பட்டக் கவிதைகள் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. பெரும்பாலானவர்களின் தேட்டமும் அதுவாக இருந்ததால் என்னவோ?
ஆரம்பத்தில் இதுப்போன்றக் கவிதைகள் மட்டும்தான் எழுதிக்கொண்டிருந்தேன்;பின் பலச் சகோதர்ர்களின் ஆலோசனையும், ஒருச் சில சகோதரர்களின் சலிப்பும் என்னை வேறுப்பக்கம் திரும்பச் செய்தது.அதன் பலனாக சமுதாயச் சிந்தனைக்கொண்ட கவிதைகள், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் எழுதத் தொடங்கினேன்.
எல்லாக் கவிதைகளைப்போல் உண்மையையும் உணர்வுகளையும் எழுதித்தள்ளினாலும் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது வெளிநாட்டுச் சோகக் கவிதைகள்தான். இந்தக் கவிதை எழுதத் தூண்டிய சம்பவமும் மிகச் சுவாரசயமானது. ஒரு வார இதழில் வெளிவந்தக் கதையைக் படித்தேன்; அந்தக் கதை இதுதான்....
தொடரும்..
by யாசர் அரபாத் Yasar Arafat
என் பக்கம்
வாழ்த்துகள் to யாசர் அரஃபாத்
yasar arafat
Attended Mohamed Sathak College of Arts & Science
யாசர் அரஃபாத் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
1 comment:
உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி அன்ணே!
வல்ல ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தாரின் மீதும் அருள் புரிவானாக!
Post a Comment