உன் கூந்தலில் சூட்டிய மல்லிகையின் மணம்
உன் வரவைக் காட்டுகிறது
உன் கண்களின் கனிவான பார்வை
உன் இறைபக்தியை காட்டுகிறது
உன் நெற்றியில் உள்ள குறி
உன் தொழுகையின் ஈடுபாட்டைக் காட்டுகிறது
உன் சோர்வு
உன் உடலின் நலமற்ற தன்மையை காட்டுகிறது
உன் இதயத்தின் இருள் நிறைந்த சோர்வு
உன் பாவமான செய்கையால் உன் முகத்தில் சோகத்தைக் காட்டுகிறது
உன் புன்னகை
உன் மகிழ்வைக் காட்டி மகிழ்விகின்றது
உன் பழகும் செயல்பாடு
உன்னை உயர்வாக்கி சிறப்பைத் தருகிறது
நீ இருக்குமிட மெல்லாம் மகழ்வைத் தருகின்றது
நீ இல்லாத இடமெல்லாம் மகிழ்வு குறைகிறது
உன் வரவை விரும்பி நிற்கும் மக்கள்
உன் வரவால் நிறைவு கொள்கின்றனர்
நல்லதை நறுக்காக நயமாக கனிவாக சொல்வாய்
நற்சொர்களை கேட்க நினைவாக மனதில் நிறுத்தி வாழ்வில் செயல்படுத்துவாய்
தீய எண்ணங்கள் உன்னை தீண்டாது
நற்பண்புகள் கொண்ட மேன்மக்கள் உன்னை நாடி வருவர்\
1 comment:
அருமை ஐயா...
வரிகள் உண்மை...
Post a Comment