Wednesday, April 30, 2014

யாசர் அரபாத் அவர்களின் கவிதைத் துளிகள் (படத்துடன்)

இப்போதும்
இல்லையெனில் – பின்
எப்போது…

எனையறியாமல்
முட்டி நிற்கும் கண்ணீர்
சுவனத்தைத்
தட்டி திறக்கும்
சாவியாகட்டும்!!



மனதை திற
மணம் கமழ…

தன் விழி
நோக்கிய மாத்திரத்தில்;
உள்ளத்தைப் படிக்கவேண்டுமென
விரும்புபவர் – மனைவியை
முதலில் படித்திருக்க வேண்டும்!!


உணர்வு உணரும்…

ஆறுதல் என்பதை
வார்த்தைகளால்
அலங்கரிக்க முடியாது!!



புரிந்தவருக்கு மட்டும்;
உங்களுக்கு விளங்காது…

மருத்துவரின்
கணிப்புகள்
கானல்நீராக வேண்டி;
இறந்தப்பின்னும்
எழுந்துவிடுவான் எனும்
நம்பிக்கையிலே தாய்!!




விவாதம்…

வெற்றி மட்டுமே
இலக்காய் கொண்டு;
விதைக்கப்படும் விதை;
மண்ணின் தரத்தையும்
சேர்த்தே கொல்லும்!!


வெளிநாட்டில் நாங்கள்…

ஓடி ஆடி விளையாட முடியா
குழந்தையாக இன்று;
குழந்தைப் பெற வேண்டிய
வயதில்; வளைகுடாவில் அன்று!!

வெளி நாட்டில் நாங்கள்…

உறவுகள் கடலுக்கு அப்பால்;
மாதா மாதா பணம் மட்டும்
பயணம் செல்லுகிறது;

எல்லாம் தெரிந்தும்
எங்களுக்கான இடம்;
ஒற்றைவரியில் விளக்க முடியா
ஒருவரிப் பதில் "குடும்பத்திற்காக"!!

தொடரும் ....,,

                                 Yasar Arafat shared என் பக்கம்'s photo.
வாழ்த்துகள் to யாசர் அரஃபாத்
yasar arafat
Attended Mohamed Sathak College of Arts & Science
யாசர் அரஃபாத் அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: