அன்புடன் புகாரி
Abu Haashima Vaver
நிஷா மன்சூர்
ரஹீம் கஸாலி
Joseph Xavier Dasaian Tbb
Yasar Arafat
M.Rishan Shareef
இவர்கள் மற்றும் பல நண்பர்கள் எழுத
ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருக்க
அத்தனையும் நானும் படிக்க
படித்ததை நானும் படித்தபடியே எழுதாமல்
படித்ததை நானும் ஒரு கோணத்தில் உருவாக்க முயல்கின்றேன்
எனது ஆக்கம் என் மனோநிலைக்கு தகுந்ததுபோல் சுரக்கிறது
அறிவைப் பெறுவதில் ஒரு ஆர்வம் வருகிறது
அறிவு ஒரு சக்தியை தருகிறது
என் மனது சொன்னது
அவர் சொன்னார்
இவர் சொன்னார்
என்பதால் உயர்வாக இருக்க முடியாது
அவர்கள் கருத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல்
உன் அறிவை சிந்திக்க விடு
உனக்கு இறைவன் கொடுத்த அறிவை தூண்டி சிறப்பாக்கி விடு
உன்னால் உருவாக்கப் பட்டது உனக்கு மகிழ்வைக் கொடுக்கும்
உன்னால் உருவாக்கப் பட்டதனால் வந்த வினையும் உன்னையே சார்ந்ததாகும்
அதனால் அந்த செயலால் வந்த வினைகள் தந்த நல்லது கெட்டது அனைத்தும் உன்னால் வந்தது
அதனால் மற்றவர்கள் மீது குறைகள் காண மாட்டாய்
அவரும் இவரும் சொன்னதில்
இருக்கின்ற சிறப்பான கருத்தின் கருவை எடுத்துக் கொண்டு
நமக்கு நாமே ஒரு கருவை உருவாக்கி கொடுக்க வேண்டும்
நாம் கொடுக்க விரும்புவது
உயர்வானதா அல்லது தாழ்வானதா என்பதனை நம் அறிவு காட்டிக் கொடுக்கும்
அல்லது காலம் அதனை நம்மை உணர்த்தச் செய்துவிடும்
நினைத்தால்தான் வழி பிறக்கும்
முயன்றால்தான் முடிவு கிடைக்கும்
செய்
செய்து முடி
குப்பையும் எருவாகி செடி வளர பயன் பெறும்
உருவின் மாற்றம்
சுழலும் உலகம் போல்
No comments:
Post a Comment