Tuesday, November 24, 2020

கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களை பிழைப்பொருத்து மன்னித்து அவருக்கு நற்கூலி வழங்குவானாக... ஆமீன்...

 

சகோதரி @Kalaimahel Hidaya Risvi இலங்கையின் குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஆளுமை. அவர்களுடன் எனக்கு சில ஆண்டுகால முகநூல் நட்பு. நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதபோதும், ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் என்னை இலங்கை வருமாறு அன்புடன் அழைப்பு கொடுத்தார். என்னையும் தடாக குரூப்பில் சேர்த்துக் கோண்டார்.

அவரது கவிதைகளை எமது வலைதளத்தில் மற்றும் வலைப்பூவில் அவர்கள் அனுமதியுடன் வெளியிட்டு மகிழ்வேன்.

அவர்களை இறைவன் தன்வசம் அழைத்துக் கொண்டான் என்பது எனக்கு பெரிய வருத்தத்தை தந்தது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...

வல்ல நாயன் அவர்களை பிழைப்பொருத்து மன்னித்து அவருக்கு நற்கூலி வழங்குவானாக... ஆமீன்...

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கலைமகள் ஹிதாயா றிஸ்வி

சாதனைகள் பெண்களுக்கும் தடையில்லை. ஹிதாயா றிஸ்வி அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் ஹிதாயா றிஸ்வி அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் ஹிதாயா றிஸ்வி அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

தயவு செய்து அவசியம் கீழ் உள்ள லிங்க்குகளை சொடுக்கிப்(கிளிக் செய்து) பாருங்கள்( படியுங்கள்)

கலைகளாய் கவிகளை

அள்ளித்தரும் கவியரசி

ஹிதாயா றிஸ்வி அவர்கள் வலைப்பூக்கள்:(Blogs

இஸ்லாமியப்பூங்கா...

கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் சிறுகதைகள்..

ஹிதாயாவும் மருத்துவமும்.

வலிகொண்ட மெளனங்கள்.....

விரியும் பூக்கள்...

தடாகம் கலை இலக்கிய வட்டம்

வசந்த காலம்...

கலைமகள் ஹிதாயா றிஸ்வி

விக்கிப்பீடியாவில் ஹிதாயா றிஸ்வி

சொடுக்கி கிளிக் செய்து படியுங்கள் http://ta.wikipedia.org/wiki

திறமைக்கு மரியாதை -2012 கலை கல்வி கலாசார சமூக அபிவிருத்தி அமையத்தினால் ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஜூலை 08ம் திகதி நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழா மற்றும் திறமைக்கு மரியாதை கௌரவிப்பு விழாவில் கவிதை இலக்கியம் ஆகிய துறைகளுக்காக கலைமகள் ஹிதாயா றிஸ்விக்கு விருதும் இலங்கையில் முதல் முதலில் பாவரசி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது

https://www.facebook.com/nidurali/videos/10219064208498472

Kalaimahel Hidaya Risvi

மழை பொழியும் போது

உடம்பு நடுங்குகிறது

குளீர்

போர்வையை வாங்கும் போது

கொறோனா பரவி விடுகினறது

வைரஸ்தொற்று

மரணத்திற்கு பயப்படாத மனம்

எரிப்பதை நினைத்து பயப்படுகிறது

தீ

யாஅள்ளாஹ்

எங்கள் ஜனாஸாக்களை

நல்லடக்கம் செய்ய அருள் புரிவாயாக ஆமீன்.

துஆ.

்்்்்்்்்்்்்்்்்்்்்்்்




No comments: