எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக்கொண்டவர்களே அல்லாஹ்வின் அவ்லியாக்கள், வலிமார்கள் எனப்படுவார்கள்.
அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள்
வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும்
-.mailofislam
"இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக( அவ்லியாக்கள் என்றால் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பொருள். வலி என்றால் ஒரு இறைநேசரை குறிக்கும். வலிமார்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பல இறைநேசர்களை குறிக்கும்.) இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் (இதனை) புரியாமல் இருக்கிறார்கள்".(அல்குர்ஆன் 8:34)
"யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள்தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" எனநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள். (நூல் பஸ்சார்)
வலிமார்களின் வணக்கவழிப்பாடுகள் மிகவும் சிறப்புமிக்கது. "அவர்கள் இரவு வேளைகளில் சிறிது நேரமே தூங்குவார்கள். அதிகமான நேரம் இபாதத்திலே ஈடுபடுவார்கள். ஸஹர் நேரத்தில் எழுந்து பாவமன்னிப்பு தேடுவார்கள். இவர்களே வலிமார்கள்"
-Ahlus Sunnath Wal Jamath
வலிமார்கள் வரலாறு
எம். ஆர். எம் அப்துற்-றஹிம்
வெளியீடு : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் .
வலிமார்கள் வரலாறு
♦ முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு
♦ அஹ்மத் கபீர் ரிபாயி ரலியல்லாஹு அன்ஹு
♦ காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு
♦ ஷா பஹாவுத்தீன் நக்ஷபந்தி ரலியல்லாஹு அன்ஹு
♦ அபுல்ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு
♦ ராபியா பஸரி ரலியல்லாஹு அன்ஹா
♦ நாகூர் ஷாஹுல் ஹமீத் ரலியல்லாஹு அன்ஹு
♦ உவைஸூல் கரனீ ரலியல்லாஹு அன்ஹு
♦ அபூயஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு
♦ இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரலியல்லாஹு அன்ஹு
♦ அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரலியல்லாஹு அன்ஹு
♦ ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு
♦ ஸகீக் பல்கி ரலியல்லாஹு அன்ஹு
♦ ஸரீ அஸ்ஸகதி ரலியல்லாஹு அன்ஹு
♦ சுப்யான் அத்தௌரீ ரலியல்லாஹு அன்ஹு
♦ மஹ்ரூபுள் கா்கி ரலியல்லாஹு அன்ஹு
♦ துன்னூன் மிஸ்ரி ரலியல்லாஹு அன்ஹு
♦ தாவூத் தாயீ ரலியல்லாஹு அன்ஹு
♦ பிஷ்ர் இப்னு ஹாரீத் ரலியல்லாஹு அன்ஹு
♦ இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு
♦ இமாம் கஸ்ஸாலீ ரலியல்லாஹு அன்ஹு
♦ இமாம் ஷாபியீ ரலியல்லாஹு அன்ஹு
♦ மாலிக் இப்னு தீனார் ரலியல்லாஹு அன்ஹு
♦ மௌலானா ரூமி ரலியல்லாஹு அன்ஹு
http://www.mailofislam.com/awliya_history_tamil.html
--------------------------------
ஸஹாபாக்கள் என்றால் யார்?
அரபி மொழியில் ஸஹாபா என்பது நண்பர்கள், தோழர்கள் என பொருள்படும். இது பன்மை வடிவமாகும். இதன் ஒருமை வடிவம் ஸஹாபி (தோழர்) என்று சொல்லப்படும்.
இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் என்பது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் தோழர்களை குறிக்கும்.
ஒருவர் ஸஹாபா என அழைக்கப்பட பின்வரும் தகுதிகள் வரையறை செய்யப்படுகிறது:
நபிகள் நாயகம் ﷺ அவர்களின் காலத்தில் வாழ்ந்து அன்னவர்களை நேரடியாக தமது கண்களினால் பார்த்து அன்னவர்களை விசுவாசம் கொண்டு கடைசி வரை முஸ்லிமாகவே வாழ்ந்து மரணித்தவர்களையே ஸஹாபாக்கள் என்று சொல்கிறோம்.
ஸஹாபாக்களின் அந்தஸ்து
இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் நபிமார்களுக்கு அடுத்தப்படியான மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்களிலும் சில ஸஹாபாக்கள் சிலரை விட உயர்ந்த அந்தஸ்தில் கணிக்கப்படுகின்றனர்.
ஸஹாபக்களிலேயே பிரதம அந்தஸ்தில் வைத்து கருதப்படுவர்களாக அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அப்துல் ரஹ்மான் இப்ன் அவ்ப், ஸஃத் பின் அபீ வக்காஸ், ஸைத், அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களால் சுவர்க்கவாதிகள் என்று இந்த பூமியில் வைத்தே சுபசோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்கள் கருதப்படுகின்றனர். அவர்களுக்கு பின் பத்ர் யுத்தத்தில் பங்கேற்ற ஏனைய பத்ர் ஸஹாபாக்கள் சிறப்பானவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
ஸஹாபாக்களின் இஸ்லாமிய சேவை
ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லாம் முழு உலகிலும் பரவுவதற்கும் செய்த தொண்டு சொல்லி முடிக்க முடியாது.
அது மட்டுமல்ல, இறைவேதமாகிய அல் குர்ஆனையும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் புனித வார்த்தைகளான அல் ஹதீஸையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து கொடுத்தவர்கள் ஸஹாபாக்களே.
எப்படி எனில், அல் குர்ஆன் நூல் வடிவில் அச்சிடப்பட்டு யாவரும் வாசிக்க கூடிய விதத்தில் தொகுக்கப்பட்டது ஸஹாபாக்களாலேதான். அதே போன்று நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பொன் மொழிகளை பாதுகாத்து அவற்றை அடுத்த சந்ததிக்கு கற்று கொடுத்து இன்று வரை அல் ஹதீஸ்கள் படிக்கவும் பின்பற்றப்படவும் மூல காரணகர்த்தாக்கள் ஸஹாபாக்களாலேதான்.
ஸஹாபாக்களின் சிறப்பு
ஸஹாபாக்களின் சிறப்புகளை சொல்ல நிறைய அல் குர்ஆன் வசனங்களும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஹதீஸுகளும் உள்ளன.
அவற்றில் சில:
* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.
அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 3673, ஹிஹுல் முஸ்லிம் - 2541, மிஷ்காத் - 6007
* கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள் என்னைக் கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தார். அவர்களுக்கு நோவினை செய்வோர் என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை அளிக்கப்படுவான்.
அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத்
ஸஹாபாக்கள் வரலாறு
♦♦ ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு
♦ ஹழ்ரத் உமர் fபாரூக் ரலியல்லாஹு அன்ஹு
♦ ஹழ்ரத் உஸ்மான் கனி ரலியல்லாஹு அன்ஹு
♦ ஹழ்ரத் அலி அல் ஹைதர் ரலியல்லாஹு அன்ஹு
ஸஹாபா பெண்மணிகள் வரலாறு
♦ அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா
http://www.mailofislam.com/sahaba_history_tamil.html
ஸஹாபாக்கள்
நபி(ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்று நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்திலேயே மரணித்தவர்கள்தான் ஸஹாபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். ஸாஹிப் என்றால் நண்பர் என்பது அர்த்தமாகும். ஸஹாபா என்றால் நபி(ஸல்) அவர்களின் நண்பர், தோழர் என்பது அர்த்தமாகும். இவ்வகையில் ஸஹாபி என்றால் நபித்தோழர் என்பது அர்த்தமாகும். அல்லாஹ்வின் தூதரின் தோழர்களாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருப்பதே அவர்களின் சிறப்பிற்கும்.
அந்தஸ்த்திற்கும், நேர்வழிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு அன்பாளராக, அருளாளராக இருந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. (9:61, 5:43)
‘அவர்களில் பல தரப்பினருக்கு நாம் வழங்கிய வசதிகளின்பால் உமது இரு கண்களையும் நீர் செலுத்தாதீர். அவர்கள் குறித்து நீர் கவலைப்படவும் வேண்டாம். நம்பிக்கையாளர்களுக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!’ (15:88)
‘நம்பிக்கையாளர்களில் உம்மைப் பின் பற்றுவோருக்கு உமது (பணிவெனும்) இறக்கையைத் தாழ்த்துவீராக!’ (26:215)
இந்த இரு வசனங்களிலும் நபித்தோழர் களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்துவீராக என அல்லாஹ் நபியை ஏவுகின்றான்.
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
https://www.islamkalvi.com/?p=60
No comments:
Post a Comment