#தொட்டால்_தொடரும்_18 #குறுந்தொடர் அபு ஹாஷிமா
(அரேபிய
தேசத்து வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய தொடர் )
சூப்பிரன்டன்ட்
பஸ்ஸாம் தாமர் என்னை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார்.
பஸ்ஸாமுக்கு
35 வயசுதான் இருக்கும்.
ஆங்கிலப்பட
கதாதாயகனைப் போன்ற தோற்றம். பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃபின் முகப்பொவுகூட அவரிடம் இருந்தது. அளவான உடம்பு . ஆறடிக்கும்
சற்றும்
கூடுதலான உயரம் .
நீட்டான
டிரஸ். அழகான கோட்.
நான்
பார்த்த லெபனானிகளைவிட
வித்தியாசமான
மனிதர்.
பார்த்த
மாத்திரத்தில் அவரது கம்பீரம் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தது. ஒரு ஆங்கிலேயனைப் போலவே அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன.
பஸ்ஸாம்
என்னுடைய பயோடேட்டாவை பார்த்துவிட்டு என்னைப் பற்றிய விபரங்களைக் கேட்டார்...
பிரிட்டிஷ்காரனின் தாய்மொழியில்.
நான்
பதில் சொன்னது தமிழ்நாட்டு இங்கிலீஷில்.
தொரை
இங்கிலீஷ்லாம் பேசினீங்களோன்னு கேக்கப்படாது.
ஏதோ
பேசினேன்.
என்னைப்பற்றிய
விபரங்களை கேட்டுவிட்டு மற்ற தொழிலாளர்களின்
பேப்பர்களை
கையிலெடுத்து
இதையெல்லாம்
எழுதியது யார்னு நக்கீரனைப்போல அவர் கேட்க ...
" நானேதானய்யா
எழுதினேன் " என்று
நாகேஷைப்போல
நான் பதில் சொன்னேன் .
கொஞ்ச
நேரம் நடந்த சம்பாஷணையில்
வேலை செய்யும் பலருக்கு ஆங்கிலம் அறவே தெரியாது என்பதை அவர் நன்றாகத் தெரிந்து கொண்டார் .
பேசத்
தெரியாதவன் ஊர்ல கொன்னையன் கெட்டிக்காரன்னு சொல்ற மாதிரி ...
நான்
கொஞ்சம் படிச்சவன் என்பதில் அவருக்கு திருப்தியும் என்மீது கொஞ்சம் நல்லெண்ணமும்
ஏற்பட்டது.
" படிச்சவன்
எதற்கு கிளீனிங் வேலை செய்தே?" ன்னு ஒரு கேள்வியை கேட்டார்.
#இந்தத்_தொடருக்கான_உயிரோட்டமே #இதுதான் ..
" நான்
படிச்சவன்தான். அதை நான் டோனிகிட்ட சொன்னேன். ஆப்பரேட்டர் வேலைகூட வேண்டாம். மெஷின் ஹெல்ப்பர் வேலை தந்தாலே போதும். கிளீனர் வேலை வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். அது டோனிக்குப் புரியல. செய்யலேன்னா ஊருக்கு பேக் பண்ணிருவேன்னு சொன்னாரு. அதனால வேற வழியில்லாம செய்தேன் " என்றேன்.
அதைக்
கேட்டதும் அரபியில் டோனியைக் கொஞ்சம் கடிந்து கொண்டார் பஸாம் . பிறகு ...
" ஊருக்குப்
போக வேண்டியதுதானே ...
அங்க
படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்குமே ? " என்றார்.
" வேலைகிடைக்கும்
. நல்ல சம்பளம் கிடைக்காது . எங்க பக்கத்துல உள்ளவங்க நிறையபேரு இங்கே வந்துட்டாங்க. அதனால நானும் வந்துட்டேன் . அதுமட்டுமில்லே ...
இங்கே
வருவதற்கு நிறைய பணமும்
செலவு
செய்திருக்கேன் . அதையெல்லாம் சம்பாதிக்காம ஊருக்குப் போனால் ரொம்ப கஷ்டமாயிரும் "னு சொன்னேன்.
" இந்த
வேலையில் உனக்கு என்ன கஷ்டம்?" னு கேட்டாரு .
" ஒரு
கஷ்டமும் இல்லே.
கஷ்டம்னு
தான் சோல்லவும் இல்லே.
ஹெல்ப்பர்
வேலைன்னா படிப்படியா
பிரமோசன்
கிடைக்கும். இதில் கிடைக்காது " என்றேன்.
மேலும்பல
கேள்விகள் கேட்டார் .
நானும்
அசராம பதில் சொன்னேன்.
ஹவ்ஸ்
கீப்பர்னு தெரிஞ்சதும்
சிலர்
கேலி செய்ததையும்
மனம்
வருத்தப்பட்டதையும் சொன்னேன்.
அதைவிட
கூடுதலாகவும் சொன்னேன்.
எல்லாவற்றையும்
பொறுமையாக கேட்டுவிட்டு புன்னகைத்தார்.
இந்தியத்
தொழிலாளர்களின்
சிரமங்களையும்
பிரச்சினைகளையும்
ஓரளவு
அவர் புரிந்து கொண்டார்.
அதன்பிறகு
...
எழுந்து
நின்று என் கையைப் பற்றிக் குலுக்கி வாழ்த்துச் சொன்னார்.
மற்றவர்களைவிட
அதிகமாகப் படித்திருந்தும் தயங்காமல் கிளீனர் வேலை செய்ததைப் பாராட்டினார்.
டோனியும்
நட்பு முகத்தோடு
கைகுலுக்கினான்.
நான்
மெய் சிலிர்த்துப் போனேன்.
" அடுத்தவாரம்
நீ மெஷின் ஆப்பரேட்டர்.
உனக்கு
எந்த மெஷினில் வேலை செய்ய விருப்பமோ அதை நீ சொல்லலாம் " என்றார்.
மனதுக்குள்
ஆயிரம் ரோஜாக்கள் பூத்ததுபோல் அப்படி ஒரு சந்தோஷம் .
கண்களில்
கண்ணீர்கூட எட்டிப் பார்த்தது. இப்போது பஸ்ஸாமின் கையை நான் பற்றிக்கொண்டு
நன்றி
நன்றி என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினேன்.
பஸ்ஸாம்
என் தோளில் தட்டி எனது நன்றியை ஏற்றுக் கொண்டார்.
நான்
ஒரு மெஷின் பெயரைச் சொல்ல டோனி அதை குறித்துக் கொண்டான்.
கிட்டத்தட்ட
ஒருமணிநேரம் பஸ்ஸாமோடு
பேசிவிட்டு
கேபினை விட்டு
நானும்
டோனியும் வெளியே வந்தோம்.
" யாரிடமும்
எதுவும் சொல்லாதே " என்றான் டோனி.
நான்
செக்ஷனுக்கு வந்து
என்னுடைய வேலைகளை இயல்பாக செய்ய ஆரம்பித்தேன்.
( இங்கே
எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. நல்ல படித்திருந்தும்
திறமை
இருந்தும் மோசமான வேலைகளில் வந்து மாட்டிக் கொண்டு
அதிலிருந்து
விடுபடவோ ஊருக்குப் போகவோ முடியாமல் அவஷ்தைப் படுபவர்கள் அனேகர். அவர்களைப்பற்றிய
சில குறிப்புகளையும் இந்தத் தொடரில் சொல்வேன். )
ஊருக்கு
நாலு நல்லவர்கள் அடுத்தவன்
நாசமாப்
போறதைப் பார்த்து சந்தோஷப்படுவதைப்போல
எங்கள்
செக்ஷனிலும் அப்படி சிலபேர் இருந்தார்கள்.
" என்ன
டிக்கெட் போட்டாச்சா ?"
" இவன்
பெரிய மத்தவன் .. சூப்பிரன்டே கூப்பிட்டு சீட்டை கிழிச்சிட்டாரு ..."
" செய்றது
கிளீனர் வேலை என்றாலும் பெரிய மேனேஜர் மாதிரி நெனப்பு ..
எல்லாம்
போச்சா ..". என்று நக்கல் சிரிப்போடும் தாள முடியாத சந்தோஷத்தோடும் வெளிப்படையாகவே
சிலர்
பேசினார்கள். நானும் முகத்தை சோகத்தோடு வைத்துக் கொண்டேன்.
ஓரிரு
நண்பர்கள் மட்டும் நிஜமாகவே
வருத்தப்பட்டு
அனுதாபம் தெரிவித்தார்கள்.
வியாழக்கிழமைகளில் ஒரு
மணிவரைதான் வேலை. வேலைமுடிய பத்து நிமிடங்கள் இருக்கும்போது அடுத்த வாரத்துக்கான பணி விபரங்களை நோட்டீஸ் போர்டில் நான்தான் வாராவாரம் கொண்டுபோய் ஒட்டுவது வழக்கம்.
அதில்
யார் யாருக்கு எந்தெந்த மெஷினில் வேலை ..
யார்
யார் ஹெல்ப்பர் போன்ற விபரங்கள் இருக்கும். அதை பார்த்து விட்டுத்தான் எல்லோரும் போவார்கள்.
அந்த
வாரத்துக்கான ஒர்க் ஷெட்யூலை
கடைசி
நேரத்தில் சூப்பர்வைசர் டோனியே கொண்டு வந்து ஒட்டினான்.
வழக்கம்போல்
எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு போய் பார்த்தார்கள்.
SA6 மெஷின்
ஆப்பரேட்டராக என் பெயரும் என்னுடைய ஹெல்ப்பராக ஜார்ஜ் வர்க்கீசின் பெயரும் இடம் பெற்றிருந்தன.
ஜார்ஜ்
வர்க்கீஸ் நாலு வருட சீனியர்
ஆப்பரேட்டர்.
ஒர்க் லிஸ்டை பார்த்ததும்
கொதித்து
விட்டான்.
" என்னடா
மயிரே ... ஒனக்கு நான் ஹெல்ப்பரா ? நீ சூப்பிரன்டுக்கு மணியடிச்சு ஆப்பரேட்டர்
ஆயிட்டே.
நான்
ஒனக்கு ஹெல்ப்பராயிட்டு வேலை செய்யணுமா .... முடியாதுடா போடா ..."ன்னு ரொம்பவே கலஞ்சான்.
" எதா
இருந்தாலும் அவன்மார்கிட்ட போயி பேசிக்கோ" ன்னு சொல்லிட்டு நான் ஒதுங்கிட்டேன்.
எல்லோருக்கும்
ஆச்சர்யமாக இருந்தது.
நண்பர்களுக்கு
சந்தோஷமாக இருந்தது.
நானும்
நண்பர்களும் டென்ஷனில்லாமல் இரவு நெடுநேரம்
பேசிக்
கொண்டிருந்தோம்.
அடுத்த
நாள் வெள்ளிக்கிழமை.
காலையில்
அல்கபீர் மட்டன் எடுத்து வந்து நானே கறி வைத்து நெய்ச்சோறும் ஆக்கி நண்பர்களுக்கு விருந்து வைத்தேன். ஜும்மா தொழுதுவிட்டு வந்து சந்தோஷமாக சாப்பிட்டோம்.
அந்த
சந்தோஷத்தை குடும்பத்தாரோடு
பகிர்ந்துகொள்ளத்தான்
போன் வசதி எதுவும் இல்லை.
வழக்கம்போல
அந்த இரவும் தூக்கம் வராமலே கழிந்தது. காலையில் எழுந்து
வேலைக்குப்போய்
எனக்கு ஒதுக்கப்பட்ட
மெஷினில்
வேலையை ஆரம்பித்தேன்.
எப்படி
ஆன் செய்யணும் ...
எவ்வளவு
டெம்பரேச்சரில் மெஷினை
ஓட
விடணும் போன்ற எதுவும் தெரியாமல் எனக்கு ஹெல்ப்பராக வந்த வரக்கீசிடம் உதவி கேட்டால் ....
" அடேய்
... நீதான் ஆப்பரேட்டர்.
நான்
ஹெல்ப்பர். எனக்கு ஒண்ணும் தெரியாது. மெஷின் ஓட்டத் தெரியலேன்னா
கிளீன் பண்ணப்போடா " ன்னு ரொம்பவே சூடானான்.
நான்
டோனியிடம் போய்
ஸ்டார்ட்டிங்
டிரபுள் பிரச்சினையை சொல்ல அவனே வந்து எனக்கு எல்லாம் சொல்லித் தந்தான்.
ஜார்ஜ்
வர்க்கீசை விட நான் கொஞ்சம் கூடுதலாகவே புரடக்சன் கொடுத்தேன்.
ஓரிரு
நாட்களில் மெஷின் நான் சொன்னபடி கேட்டது.
அதில்
பெரிய சந்தோஷம் ...
யாரிடமும்
பேசாத பஸ்ஸாம் தாமர்
காலையில்
வேலைக்கு வந்ததும்
என்
அருகில் வந்து என்னிடம் கொஞ்ச நேரம் பேசி என்னுடைய வேலைகளை
கவனித்து
தோளில் தட்டி விட்டுச் செல்வார்.
எனக்கு
மேன் ஆப்தி மேட்ச் அவார்டு
கிடைத்தமாதிரி இருக்கும்.
வர்க்கீஸ்
பல்லைக் கடித்துக் கொள்வான்.
அவனுடைய
பாமரத்தனமான கோபமும்
ஏச்சும்கூட
ரசிக்கக் கூடிய அளவுக்கு
வந்து
விட்டது. ஒரு வாரத்தில் சகஜ நிலைக்கு வந்து விட்டான்.
ஆயிற்று...
வேலைக்குச்
சேர்ந்து ஆறு மாதங்கள்
போனது
தெரியவில்லை.
விடுமுறையில்
ஊருக்குப்போன நுஜுல்
திரும்ப
வந்து விட்டான். அவனும் ஒரு மெஷின் ஆப்பரேட்டராகி விட்டான்.
உ.பி.யைச் சேர்ந்த
ஜாவேத் அகமது
புதிய
ஹவுஸ் கீப்பர்.
ஏழாவது
மாதத்தில் ஒருநாள்
எதிர்பாராத
அந்த சம்பவம் நிகழ்ந்தது ...
தொட்டால்
தொடரும்
இன்ஷா
அல்லாஹ்
தொடரும்
!
#அபு_ஹாஷிமா
No comments:
Post a Comment