பாமணக்கும் நல்ல பதியாம் மயூரநகர்
தாமதிக்க வாழும் தயாநிதியே - நாமதிக்கும்
நண்பர் சயீத்தென்னும் நாவலா தீன் நெறிப்
பண்பாளா நன்மை செய்யும் பாங்களா - எண்ணலிலும்
நல்லதையே நாவுடையோய் - வல்ல
அறிவுடையோய் அன்புடையோய் யார்க்கும் உதவும்
நெறியுடையோய் நீள்புகழோய் நெஞ்சம் - அறிந்தவர்கள்
என்றும் மறவா இயல்புடையோய் இன் தமிழால்
நன்று இந்த நாடறிந்த நற்கவிஜன் - பொன்றாத
சீறாய்ப் புகழ் பாடும் சீர்சால் ஷரீபுகவி
மாறாத அன்புடனே வாழ்திமிக நேரார்ந்த
ஆதரவுடனே அரிய சலாமுசைத்து
தூதாதாக விட்டேன் இத் தூக்கு உன்பால் -கோதரவே
அங்கு நான் வந்துற்று அழகுறவே சீறாவின்
பொங்கு தமிழ் பாட்டின் பொருள்கூ-உங்களரும்
நேசத்தைப் பாராமல் நித்திரையும் தான் துறந்து
சீரத்தைக் கேட்டச் சிறப்புடனே -சாரமுன்
சொல்லாலே வாழ்திச் சுகப்படும் தன்மையிலே
நல்லபடி யாய்ப் பொருளும் நல்கியே -எல்லையிலா
அன்பிலே எம்மை அமுக்கித் திணற வைத்த
நன்பரே உங்களுக்கு நல்லிறைவன் -என்றேன்றும்
ஏற்ற நறும் இன்பமே ஈக இடர்களைந்து
போற்றுமுயர் செல்வமெல்லாம் போந்தளிக்க சாற்றினேன்
வண்ணக் கவிமடல் வாழ்க வளம் பெருக்கிக்
புண்ணியமும் சேரப் பொலிந்து !
( 1978 இல் பாடியது )
கவி மாலை --கலைமாமணி வி கா.மு. செரீப் நீடூர் அல்ஹாஜ், வழக்கறிஞர், ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப் பாடியது .
(ஏ.எம்.சயீத் அண்ணன் பற்றிப்கவிஞ்ர்கள் பல சந்தர்பங்களில் கவிதை பாடிருகிறார்கள். அந்த கவிதைகளில் சில .... )
நன்றி : "நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்"
அ. மா . சாமி
No comments:
Post a Comment