மார்க்க மூலாதார நூல்களின் தமிழாக்கம் மற்றும் வெளியீட்டுத் துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக முத்திரை பதித்துவரும் ரஹ்மத் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவருடன் Rahmath Trust's Founder President -M.A. Musthafa Bhai) ஒரு கலந்துரையாடல்!
பாகம்-2
ரஹ்மத் டிரஸ்ட் நிறுவனர் மரியாதைக்குரிய அண்ணன் முஸ்தபா பாய் அவர்களோடு ஒரு கலந்துரையாடல் சில நாட்களுக்கு முன்னால் ரஹ்மத் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றதையும்
அந்தக் கலந்துரையாடலில் சுவாரசியமான பல தகவல்களை
அண்ணன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதையும் குறிப்பிட்டிருந்தேன்.
அதன் காணொளி முதல் பாகம்zfi தற்போது யூட்யூப் வலைதளத்தில் ரஹ்மத் டிவி சார்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையும் தெரிவித்திருந்தேன். ں
அதில் ரஹ்மத் அறக்கட்டளையின் முதல் வெளியீடான ஸஹீஹுல் புகாரி பணியில் என்னை இணைத்துக் கொண்டது முதல் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கிய முஸ்தபா அண்ணனின் மகத்தான சேவை, அதனால் நான் பெற்ற மார்க்க ஞானம் போன்ற பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் தொடக்கத்தில் அறக்கட்டளையின் முதல் மார்க்க ஊழியனாக தன்னந் தனியனாக பணியைத் தொடங்கிய என் ஆலோசனைகளை முஸ்தபா அண்ணன் அவர்கள் கவுரவித்து ஏற்று மற்ற அறிஞர்களையும் தமிழாக்கப் பணியில் இணைத்து ஒரு குழுவாக மாற்றி அப்பணியை விரிவாக்கம் செய்தது, அதற்காக உலக லாபம் கருதாமல் பெரும் செலவில் தமிழாக்கக் குழுவை உருவாக்கிய முஸ்தபா அண்ணன் அவர்களின் சேவை மனப்பான்மைஙக குறித்தும் அதில் சொல்லியிருந்தேன்.
எனது குடும்பப் பின்னணி, பதின்ம பருவத்தில் என் மனநிலை, மார்க்கக் கல்வி பெற்றிட ஏற்பட்ட தடைகள், மார்க்கப் படிப்புக்கு நான் வந்த காரணம் என பலப்பல சுவையான தகவல்களையும் கொடுத்திருந்தேன்.
இப்பொழுது அக் காணொளியின் இரண்டாவது பாகத்தை யூட்யூப் வலைதளத்தில ரஹ் த் TVயினர் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இரண்டாம் பாகத்தைப் பார்க்க விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முடிந்தவரை பிறருக்கும் பகிர்ந்து இறைவனிடம் நன்மைகளைப் பெற்றுக கொள்ள வேண்டுகிறேன்.
உரையாடல்: ஸ்தாபகர் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை M.A. முஸ்தபா & இஸ்லாமிய அறிஞர் காஞ்சி அப்துர் ரவூப் பாகவி இடம்: ரஹ்மத் ....
No comments:
Post a Comment