Senthilkumar Deenadhayalan
முதுமக்கள் தாழி!
நீங்கள் படத்தில் காண்பது முதுமக்கள் தாழி எனப்படும் பழம் பானைகள்.
இதன் உருவாக்கமும், உபயோகமும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்ப நாகரீக காலத்திலிருந்து இருக்கிறது!
நீங்கள் காணும் இந்தப் பானைகளும் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வயதுடையவே!
இவை பொறையார் பெரிய பள்ளி தெருவில் வசித்து வந்த திரு. முகமது யூசுஃப் மரைக்காயர், திருமதி ஹவ்வா அம்மா ஆகிய தம்பதியருக்கு சொந்தமானது. பின்னர் அவர்களது மூத்த மகன் திரு. முகமது கௌஸ் மரைக்காயரிடம் வந்து தற்போது முகமது கௌஸ் அவர்களின் இரண்டாவது மகனும் எனது நண்பருமாகிய M. ஜாகிர் ஹுசைனுக்கு Sha Jahir சொந்தமாக உள்ளது.
தற்போது பொறையாரை அடுத்த எடுத்துக்கட்டி சாத்தனூரில் #Villa_De_Sultan என்ற ஃப்ரெஞ்சு பெயருடைய வீட்டில் இருக்கிறது!
நடுவிலுள்ள பானை பழமை மாறாமல் அப்படியே உள்ளது. மற்ற இரண்டு பானைகளுக்கும் ஆர்வக் கோளாருடைய ஓர் பணியாளர் ரெட் ஆக்சைட் அடித்து விட்டார். மூன்றும் சமகாலத்தவையே!
தமிழ் நாகரீகத்தில் முதுமக்கள் தாழி என்றழைக்கப்பட்ட இப்பானைகள் பயன்பாடு மாறிய பின் மரமரக்கா சால், மரமரக்கா பானை என வழக்கு மொழியால் அழைக்கப்படுகிறது.
மூன்றடி உயரமும் அதிக பட்ச விட்டமாக இரண்டேகால் அடியும் உள்ளது.
ஆரம்பக் காலத்தில் இறந்தவர்களை இது போன்ற தாழிகளில் இட்டு புதைக்கும் வழக்கமிருந்தது.
பின்னாளில் நீண்ட ஆயுளோடு இறக்காமல் இருந்த ஆனால் செயலிழந்த முதியவர்களை உயிரோடு இத்தாழியில் இட்டு சிறிதளவு உணவும், ஒரு எரியும் விளக்கும் கூட வைத்து புதைக்கும் வழக்கமிருந்திருக்கிறது.
அதற்குப் பின்னாட்களில் இவ்வழக்கங்கள் மறைந்து தானியங்களையும், புளி, எண்ணெய் போன்ற பொருள்களை சேமிக்கும் பாத்திரமாக இதைப் பயன்படுத்தும் வழக்கமாகி இருக்கிறது.
எகிப்திய, ரோமானிய நாகரீகங்களில் இது போன்ற மண் அல்லது உலோகப் பானைகளில் கடும் விஷமுடைய பாம்புகள் வளர்க்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை அப்பானைக்குள் கையை விடச் செய்து தண்டனை நிறைவேறற்றப் பட்டதாக செய்திகள் இருக்கிறது!
இன்றைக்கு ஒரு பழம்பொருளாகவும், அலங்காரப் பொருளாகவும் நண்பரின் வீட்டில் வீற்றிருககும் இப்பானைகள், தன் அகன்ற வாயால் நூறாண்டுகள் கடந்த காலத்தை விழுங்கி விட்டு, காலத்தின் மௌன சாட்சியான காட்சிப் பொருளாய் இருக்கிறது!
No comments:
Post a Comment