Sunday, December 1, 2019

Dr.G.Kanagaraj Bsc- M.B.B.S.,DLO - Nidur, Mayiladuthurai.



Dr. G Kanagaraj in Nidur, Mayiladuthurai.
டாக்டர். ஜி கனகராஜ் M.B.B.S.,ENT specialist
மருத்துவர்
எங்க ஊர் டாக்டர் கனகராஜ் அவர்கள்
Dr.G.Kanagaraj Bsc- M.B.B.S.,DLO
சிறந்த மனிதநேயம் நிறைந்தவர். அன்பனாதபுரம் வகைராவில் வந்ததால் அன்பையே அடிநாதமாகக் கொண்டு தொண்டுள்ளம் நிறைந்தவர்.
நீடூ்ர் நெய்வாசலில் பல ஆண்டுகள் பொதுமருத்துவம் பார்த்துவந்த டாக்டர். ஜி கனகராஜ்
இறப்பு செய்தி... Doctor. கனகராஜ் இறந்து விட்டார்...மிகவும் வருத்தம். ஊர் மக்கள் அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியான வருத்தமான செய்தி. எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தார் .அவரரைப் பற்றிய அருமையான கட்டுரை முன்பே nidurseasons சில் எழுதி இருந்தேன்.


உயிர்போனது உனக்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்பால் 
இதயமே கனக்கின்றது எனக்கு

உள்ளத்தால் நேசம்கொண்ட
உணர்வில் நிறைந்த உயர்ந்த மனிதர் நீர் 

உலகமும் போற்றும்
உயிரானவனே

உயிரற்ற உன் உடல்
உயிரற்ற பலரின் உணர்வுகளையும்
உசுப்பிவிட்டதே உயிரே

ஊரார் உற்றார்
உளறிக்கொண்டே இருக்கின்றனர்
உன் உயர்வின் உன்னதத்தை

நீடூர் மக்களின் சேவைக்கு அரசு வேலையையும் விட்டு வந்தீர் 
உயர்ந்த குடுபத்தில் பிறந்த நீர் 
A.V.C.கல்லூரியை உருவாக்கியவர்களில் உன் பாட்டனார் ஏனாதிமங்களம் பிள்ளை முக்கியமானவர் 
அவர் என் தந்தைக்கு நெருக்கமானவர் 
அவரது நிலங்களில்  நீடூர் நெய்வாசல் உருவானதால் 
அவர் இருக்கும்வரை ஊர் பட்டாமணியாராக கவுரவித்தனர் நீடூர் நெய்வாசல் மக்கள் 
\
உண்மையையும்
அக்கறையையும் மட்டுமே நிறைத்தவனே

உன்போல் ஆகுமோ இன்னொரு உயிர்


 ஊரார் போற்றும் உன்னதவனே

என் செய்வார்  எங்கள் ஊர் மக்கள் 
இறைவா ...

இவனின் மரணம் கண்டு
இக்கணமும் ஏக்கம்கொள்ளும்

உற்றார்ஊரார் போற்றும் இவரின் உன்னதத்தை
உயர்வுபடுத்து .

அ .முகம்மது அலி 



Mohamedali Jinnah
Mohamed Ali
Mohamedali
Mohamed Ali Jinnah

No comments: