Monday, December 2, 2019

எதைச் சொல்லலாம் ! எதைச் சொல்லக்கூடாது !

Abu Haashima
சந்தோஷங்களைச் சொல்லலாம்
சங்கடங்களை
சொல்லக்கூடாது !
சுகத்தைச் சொல்லலாம்
சுகவீனத்தை
சொல்லக்கூடாது !
உண்டதைச் சொல்லலாம்
உண்ணாமையை
சொல்லக்கூடாது !
நிறைகளைச் சொல்லலாம்
குறைகளை
சொல்லக்கூடாது !



சொல்லக்கூடாததை சொன்னால்
ஊரும்
உறவும்
பேஸும்
வாட்சும்
பகையாகும் !

பகையைக்கண்டு பதுங்கினால்
பல்லிகள்கூட
பாம்புகளைப்போல் சீறும் !

காறி உமிழ்ந்தாலே
கரைந்து போகும்
மண் தூசிகள்
மலைகளைப் பார்த்து மலைக்கலாம்.
முறைக்கக் கூடாது !

ஆணவத்தை வைத்து
அறிவு முதிராதவைகள்
ஆடும்
ஆட்டம்
இங்கேயும் ஜெயிக்காது
எங்கேயும் ஜெயிக்காது !

No comments: