அருமையானவர்களே!
இன்று நடந்த அருமையான சம்பவம்.
எமது பிரான்ஸ்
மஹல்லாவில் ஜும்ஆ குத்பா பிரசங்கம் ஆரம்பிக்கு முன் என் அருகில் வந்து அமர்ந்த
சிலமாதங்களுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற பிரஞ்சு இளைஞர் உமர், திருமறையை என்னிடம் தந்து,
"சூரா கஹ்ஃப் ஓத வேண்டும்;
அந்த பக்கத்தை எடுத்து கொடு்ங்கள்" என்று கேட்டார்.
நான் எடுத்து கொடுத்தேன்.
ஓதினார்.
இதில் என்ன பெரிய விஷயம் என்றுதான்
நினைக்க தோன்றும்.
இஸ்லாத்திற்கு வந்து சில மாதங்கள் தான் ஆனது;
திருமறையை ஓத கற்று கொண்டுவிட்டார்.
வெள்ளி கிழமைகளில் நாம் எத்தனை பேர்
கஹ்ஃப் ஓதுகிறோம்?
இல்லை, நம்மில் எத்தனை பேருக்குதான் திருமறை ஓத தெரியும்?
நாம் பிறப்பால் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்வோம்.
பின் தொழுகைக்கு இஃகாமத் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
மிஸ்வாக் செய்தார்,
அந்த முஸ்லிமான பிரஞ்சு இளைஞர் உமர்.
அவர்கள் இஸ்லாத்தை ஏற்றாலும், சுன்னத்தான விஷயங்கள் அனைத்தையும்
பெரும்முயற்சியோடு தெரிந்துகொள்கிறார்கள்.
மாஷா அல்லாஹ்!
எல்லாப்புகழும் இறைவனுக்கே!
-நட்போடு நீடூர் அபு அய்மன், பிரான்ஸிலிருந்து.
No comments:
Post a Comment