Sunday, December 29, 2019

ஜின்னா ஒரு பிரிவும் ஒரு பிரிவினையும்

ஜின்னா
ஒரு பிரிவும்
ஒரு பிரிவினையும்

உலகில் வாழ்ந்து மறைந்த
சரித்திர நாயகன் எவனும்
நிம்மதியாக வாழ்ந்து
நிம்மதியாக செத்ததாக
வரலாறே இல்லை.

பாகிஸ்தான் என்றொரு
புது நாட்டைஉருவாக்கி
அதன் மூலம், இந்தியாவில்
அமைதியாக வாழும் இந்திய
முஸ்லிம்களின் தேசபற்றை
இன்றும் சந்தேகக்கண் கொண்டு
மற்றவர் பார்க்க வழி செய்த
பாகிஸ்தான் ஸ்தாபகர், ஜின்னா
வாழ்க்கையில் சாதித்தது என்ன!


45 வயதில், பதினாறும் நிரம்பாத
பார்சி மதத்தை சார்ந்த பிரபல
தொழில் அதிபர், தின்ஷாவின்
பருவ வயது, இளம் மகளை
முஸ்லிம் லீக் தலைவர் காயிதே
ஆஜம், ஜின்னா மணம் புரிவார்
என்று அவரது குடும்பமே நம்ப
வில்லை.

ஜின்னா - ரத்தன் தம்பதியருக்கு
ஒரே ஒரு செல்ல மகள்.அவள்
பெயர் தினா ஜின்னா.தினா, தன்
தாய் வழி பாட்டியிடமே வளர்ந்து
வந்தார்.பருவ வயதை அடைந்த
மகளுக்கு நல்லதொரு முஸ்லிம்
மணமகனை தேடினார் ஜின்னா.
ஆனால் மகளோ தந்தையின்
பேச்சை கேட்பதாக இல்லை.
வேற்று மதமான பார்ஸி இன
மணமகனை பாட்டி விருப்பப்படி
மணமுடிக்க தயாரானார்.

மனம் உடைந்து போன ஜின்னா
மகளை அழைத்து பேசினார்.
முஸ்லிம் லீக் தலைவராக மக்கள்
மத்தியில் உலா வரும் தனது
இமேஜ் கெட்டு விடும் என்று
மன்றாடி பார்த்தார்.முஸ்லிம்
மதத்தில் யாரை வேண்டுமானா
லும் தேர்வு செய்து மணம் முடிக்க
மகளுக்கு அநுமதி வழங்கினார்.

அமைதியாக தந்தையை உற்று
நோக்கிய மகள் கேட்டாள்....
என்னருமை தந்தையே!
இந்த மண்ணில் எத்தனையோ
முஸ்லிம் மங்கையர் இருக்க
வேற்று மதத்தை சார்ந்த என்
தாயை தாங்கள் மணக்க
வேண்டிய அவசியம் என்ன!
தங்களுக்கு உள்ள உரிமையைப்
போன்றே எனக்கும் வேற்று
மதத்தை சார்ந்த மணமகனை
எனது கணவராக தேர்வு செய்யு
உரிமை இருக்கிறது.!
மகள் பேசிய வசனம் தந்தையை
திணற வைத்தது. அந்த அதிர்வு
அவரை நிலை குலைய வைத்தது.

1947-ல் பாகிஸ்தான் நாட்டின்
முதல் கவர்னர் ஜெனரலாக
பதவி வகித்த ஜின்னா தன்
மகளை தன்னுடன் பாகிஸ்தான்
வரும்படி அழைத்தார்.மகளோ
இந்திய குடிமகளாகவே இருப்பது
என்ற தனது முடிவை தெளிவாக
தந்தையிடம் கூறினார்.தந்தை
யின் பாகிஸ்தான் நாட்டுக்கும்
வர மறுத்தார்.தன்னையும்
கோடிக்கணக்கான இந்திய
மக்களையும் பாகிஸ்தானியர்
களாக மாற்ற முடிந்த
ஜின்னாவால், தனது ஒரே
மகளை மட்டும் பாகிஸ்தானியாக
மாற்ற இயலவில்லை என்பது
விதி வகுத்த சதி என்றே
சொல்ல வேண்டும்.

இந்தியாவின் பிரபல
தொழில் அதிபர்களில் ஒருவரும்
பிரிட்டானியா குரூப் மற்றும்
பிரபல பாம்பே டையிங் குரூப்
செயர்மேன், நுஸ்லி வாடியா
ஜின்னாவின் மகள், தினாவின்
மகன் என்பதும், ஜின்னாவின்
பேரன் என்பதும் அவர்கள்
ஜின்னா உயிர் வாழும் வரை
இந்திய குடியுரிமை பெற்று
முழுக்க இந்தியாவிலலேயே
வாழ்ந்து வந்தவர்கள் என்று
அறியும் போது பாகிஸ்தான்,
பங்களா தேஷில் வாழும்
பழைய இந்தியர்களை
நினைத்தால் சற்று
பரிதாபமாகத்தான்
இருக்கிறது.
ஜின்னாவின் ஒட்டு மொத்த
குடும்பமும் இந்திய குடும்பம்
என்பது தான் முழு உண்மை.

Vavar F Habibullah

Mohammad Ali Jinnah's daughter Dina Wadia has passed away at the age of 98 - survived by her son Indian industrialist Nusli Wadia




No comments: