உலகம் முழுவதும் 4 மில்லியன்
பள்ளிவாசல்கள் உள்ளன.ரோம்
நகரிலேயே,செயின்ட் பீட்டர்
சிடி அருகில் மிகவும் பிரசித்தி
பெற்ற மசூதி ஒன்றை போப்
பால் சில வருடங்களுக்கு முன்
திறந்து வைத்து மத ஒற்றுமை
குறித்து ஆற்றிய பேருரை
அகில கிருத்துவ நாடுகளையும்
வியப்பில் ஆழ்த்தியது.
அமெரிக்கா உட்பட
அனைத்து மேல் நாடுகளிலும்
ஆயிரக்கணக்கில் மசூதிகள் உள்ளன.
இஸ்லாமிய கலாச்சார கழகங்களாக
திகழும் இந்த மசூதிகள் செய்யும்
சமூக பொருளாதார மற்றும் கல்வி
ஹெல்த் சேவைகள் அளப்பறியது.
அயோத்தியில் பாபர் மசூதி
இருந்த இடத்தில், ராமர்
கோவில் கட்டுவோம் என்பது
இப்போதும் பிஜேபி யின்
முக்கிய தேர்தல் அறிக்கையாக
உள்ளது.பாபரும், அக்பரும்
குஜராத்தை வெற்றி கொண்டார்கள்
என்று சரித்திரம் சொன்னாலும்
அவர்கள் தமிழ் நாட்டு பக்கம்
படையெடுத்து வந்ததாக
வரலாறு இல்லை.
அதுபோலவே ஜெருசலேம்
இன்றும் யூதர்கள்,கிருத்துவர்கள்,
முஸ்லிம்கள் வழிபடும் மத
வழிபாட்டு தலமாகவே உள்ளது.
(டேவிட்,சாலமன் டெம்பிள்,
முகமது நபி வான் பயணம் மேற்
கொண்ட பைத்துல் முகத்திஸ்,
இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த
கல்லறை எல்லாம் இதில் அடக்கம்)
இது மத ஒற்றுமையின் சின்னமா
அல்லது வேற்றுமையின் சின்னமா
என்பது இன்றும் புரியவில்லை.
இந்தியாவில் சில பெரிய
மனிதர்கள் ஒன்று கூடி
பாபர் மசூதியை இடித்தார்கள்
என்பது பழைய செய்தி.
இன்று, ஒரு நல்ல செய்தியை
எனது சென்னை நண்பர்
கோபிநாத் வாட்ஸ்அப் வழி
படங்களுடன் எனக்கு
அனுப்பி வைத்திருந்தார்.
அது...அபுதாபியில் பட்டத்து
இளவரசர் சேக் முகமது
ஹிந்து சமூக மக்களுக்காக
கோடிக்கணக்கான பொருள்
செலவில் பிரமாண்டமான
ஹிந்து கோவில் ஒன்றை
நிர்மாணித்து வரும் 20 ம்
தேதி திறப்பு விழா காண
பாரத பிரதமரை எதிர்பார்த்து
காத்து இருக்கும் செய்தி
தான் அது.
இதன் மூலம் இந்த வருடத்தை
year of tolerance என்று
மன்னர் அறிவித்து இருக்கிறார்.
இந்த கோவில் கட்டுவதற்கு
பட்டத்து இளவரசர், அபுதாபி
மெயின் ஏரியாவில் 15 ஏக்கர்
நிலத்தை தானமாக வழங்கி
கவரவித்து இருக்கிறார்
என்பது சிறப்புக்குரியது.
எனது தந்தை அடிக்கடி
சொல்வார்.....
இறைவன் ஒரு லட்சத்து
இருபத்திநாலாயிரம் இறைத்
தூதர்களை ஒவ்வொரு
காலத்திற்கும் ஏற்றவாறு,
ஒவ்வொரு நாட்டிற்கும்
அனுப்பி வைத்து மக்களை
நல் வழி படுத்தியிருக்கிறான்.
ஏன்...! ராமர்,கிருஷ்ணர்,
திருவள்ளுவர் கூட இறைத்
தூதர்களாக இருக்கலாம்!
மத நல்லிணக்கத்திற்கு
உதவும் என்றால் அபுதாபி
மன்னர் போல் இந்திய
முஸ்லிம்கள் கூட அயோத்தியில்
ராமர் கோவில் கட்ட உதவி
செய்யலாம்.அந்த இடத்தை
நன்கொடையாக வழங்கவும்
செய்யலாம். மத நல்லுணர்வு
வளர இது துணை புரியும்
என்றால்!
we too can observe
a year of tolerance
Dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment