படித்ததில் மனதை உறுத்தியது🙄
நாமெல்லாம் முன்மாதிரி சமுதாயம் என்று சொல்லிக்கொண்டு🙄
சிந்திக்க வேண்டாமா?
--- --- -----
இது நான் எழுதியது அல்ல. ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். எழுதியவருக்கும் அனுப்பியவருக்கும் நன்றி
*நாலு பேர் ஒரு ஹோட்டலில் நுழைந்தார்கள். அதில் ஒருவர் சலஃபி, ஒருவர் தப்லீக்கி, ஒருவர் தரீக்கத்வாதி, ஒருவர் தவ்ஹீத்வாதி.*
💡நாலு பேரும் அமர்ந்து 'டீ' ஆடர் செய்து குடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று எரிந்து கொண்டிருந்த பல்பு அணைந்து அறைமுழுவதும் இருள் சூழ்ந்து விட்டது.
பின்னால் இருந்து ஒருவரது குரல்...
*'பல்பை மாற்றுவதற்கு உதவ உங்களில் யார் தயார்?'* என்று ஒலித்தது.
முதலில் தப்லீகி சகோதரர் எழுந்து...
*"கணவான்களே! நாம் இப்போது ஒரு அமீரைத் தெரிவு செய்வோம். பின்பு பல்பு மாற்றுவதைப் பற்றி மஷுரா செய்வோம்" என்றார்.*
இதைக்கேட்ட சலஃபு சகோதரர் உடனே எழுந்து....
*"இல்லை அவ்வாறல்ல.., வெளிச்சம் இல்லாமல் நாம் எப்படி மஷுரா செய்வது?... எனவே நாம் முதலில் 'கிலாபத்தை' கொண்டு வரவேண்டும். அதற்குப் பின்னால் இந்த நிலைமையை சீர் செய்வதை கலீபா பார்த்துக்கொள்வார்"என்றார்.*
இரண்டு பேருடைய பேச்சையும் கேட்டுவிட்டு தரீக்கத் சகோதரர் எழுந்து...
*"இல்லை. அது எதுவுமே தேவையில்லை. இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து திக்ர் செய்வோம். அந்த திக்ரின் பரக்கத்தால் வெளிச்சம் உண்டாகும்' என்றார்.*
மூன்று பேரும் கருத்துத் தெரிவித்த பின்பு, முஸ்டியை முறுக்கிக்கொண்டு எழுந்தார் தவ்ஹீத்வாதி..
*"அறிவில்லையா உங்களுக்கு?.. முதலில் பல்பை மாற்றுவதற்கு குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரம் கொண்டு வாருங்கள். அதற்குப் பிறகு பார்க்கலாம்" என்றார்.*
சிறிது நேரம் அமைதி நிலவியது... இறுதியில் யாருமே பல்பை மாற்றவில்லை. டீயை குடித்துவிட்டு இடத்தை காலி செய்தார்கள்..
இது சிரிப்பதற்கு அல்ல என்னருமை சமுதாய மக்களே! இது தான் நம் சமுதாயத்தின் உண்மை நிலை. அந்த பல்பு தான் இந்த சமுதாயத்தில் இருக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் போல, வரதட்சணை, படிப்பறிவு இல்லாமை, ஏழ்மை, வக்பு சொத்துக்கள், அரசியல் பலம் இல்லாமை, திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள், போன்ற எண்ணற்ற பல்புகள் நம் சமூகத்தில் உள்ளன. அதலபாதாளத்தில் இருக்கிறோம்.
*ஆனால் நூற்றுக்கணக்கான இயக்கங்களாகவும், ஆயிரக்கணக்கான குழுக்களாகவும் பிரித்து ஆளுக்கொரு கருத்தை கூறி யாரும் யாருடனும் ஒன்றுபடமால் இருந்துகொண்டு, மார்க்கம் பேசுவதாகவும், இஸ்லாத்தை நிலைநிறுத்துவதாகவும் கனவு கண்டுகொண்டு இருக்கிறோம். ஆனால் கடைசிவரை எந்த பிரச்சனையும் நம்மால் தீரபோவதில்லை!. அல்லாஹ்விற்கு பயந்து உண்மையில் சிந்தித்து பாருங்கள்!*
No comments:
Post a Comment