Abu Haashima
ஒரே பச்சை கலர் கொடியா இருக்கேன்னு
ஆச்சரியப்பட்டு செய்தியை பார்த்தா
அப்படி ஒரு சந்தோஷம்.
கேரளாவில் ராகுலை வரவேற்க வந்த
முஸ்லிம்கள் கொண்டு வந்த
பச்சைக் கொடியாம் இது.
பார்க்கவே எவ்வளவு அழகா இருக்கு.
பச்சை பசேல்னு .
ஒரே நிறம்
ஒரே கொடி
அற்புதம் !
இதைத்தான் பச்சைப் பிறைக்கொடின்னு
சொல்வாங்க.
#தியாகத்தின்நிறம்பச்சை
அப்படின்னு பேராசிரியர் அப்துல் சமதுவோ
செ. திவானோ கூட
ஒரு புத்தகம் எழுதியிருக்காங்க.
#குஞ்சாலி_மரைக்காயர்கள்
பச்சை கொடி கட்டி கப்பலோட்டிய
கடல் நாடு கேரளா !
முஸ்லிம்களின் வீரம் செறிந்த மண்.
போர்த்துக்கீசியர்களை எதிர்த்துப் போராடி
ஷஹீதுகளான
உண்மையான போற்றுதலுக்குரிய
#தியாகிகள்
நம்முடைய மூத்த குஞ்சாலி #பெத்தாப்பாக்கள் !
அவர்களை மதிக்கும் வகையில்
கோழிக்கோட்டில் நினைவுச் சின்னங்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள
#ஆலிம்கள்
#தியாகச்செம்மல்களான
குஞ்சாலி மரைக்காயர்களின்
வரலாறுகளை உணர்ச்சி மேலிட
பிரசங்கிக்கும்போது
ஒரு வீர உணர்வு நமக்கு ஏற்படும்.
அப்படி ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து
இன்றும் கேரள முஸ்லிம்களின்
மனதில் வாழும்
தியாகிகள் அவர்கள்.
அதன்பிறகும்
காயிதே மில்லத்
முகமது கோயா
அகமது
போன்ற பெருந்தலைவர்களை
மதித்து தங்கள் ஆட்சியாளர்களாக
தேர்ந்தெடுத்து அழகு பார்த்தவர்கள்
கேரளத்து முஸ்லிம்கள்.
முஸ்லியார்களும்
தங்கள்மார்களும் சொல்லும்
சொல்லுக்கு
மறுசொல் சொல்வதில்லை
அங்குள்ள மக்கள் !
அதனால்தான் ...
கேரள முஸ்லிம்கள்
கேரளத்திலும்
அமீரகத்திலும்
உலகின் பல பகுதிகளிலும்
தலை நிமிர்ந்து அந்தஸ்தோடு வாழ்கிறார்கள்.
அல்லாஹ் ...
அவர்களை மென்மேலும்
சிறப்பாக்கி வைப்பான்.
Abu Haashima
No comments:
Post a Comment