Wednesday, April 3, 2019

யாருக்காக!

Dr.Vavar F Habibullah
சமீபத்தில் எனது நண்பர்
ஓய்வு பெற்ற தமிழக அரசு
முன்னாள் உயர் போலீஸ்
அதிகாரியுடன் நீண்ட நேரம்
பேசிக் கொண்டிருந்தேன்.
தமிழக நிகழ்கால அரசியல்
குறித்த அவரது தகவல்கள்
என்னை சற்று ஆச்சரியம்
கொள்ள வைத்தது.



தமிழக அரசியலில் காமராஜர்
காலத்தில் இல்லாத அளவில்
பின்னாளில், அதுவும் தேர்தல்
நேரத்தில் ஜாதி அரசியல்
கனிசமாக புகுந்து விட்டது.
முக்குலத்தோர்,கவுண்டர்
வன்னியர், நாடார் சமூகங்களே
தமிழக தேர்தல் வெற்றிகளை
மிகவும் துல்லியமாக நிர்ணயம்
செய்கின்றன.

காமராஜர் நாடார் சமூகத்தை
சார்ந்தவர் என்பதாலேயே குமரி
மாவட்டத்தில் மிகவும் எளிதாக வெல்லமுடிந்தது.வேறு ஜாதியை
சார்ந்தவர்கள் இந்த தொகுதியில்
அல்லது மாவட்டத்தில் வெற்றி
பெறுவது என்பது மிகவும் கடினம்.
நாடார் சமூகத்தை சார்ந்த
வர்களே காலம் காலமாக இந்த
தொகுதி எம்பி க்களாக உள்ளனர்.
குமரி, நெல்லை,தூத்துக்குடி
மாவட்டங்களில் இந்த சமூகத்தை
சார்ந்தவர்களே இப்போதும்
வேட்பாளர்களாக களம்
இறக்கப்படுகிறார்கள்.
இவர்களே தேர்தல் வெற்றியை
நிர்ணயம் செய்கிறார்கள்.

கொங்கு மண்டலத்தில்
வெள்ளாளர் கவுண்டர்களால்
மட்டுமே தேர்தலில் வெற்றி
பெற இயலும்.இன்றைய சட்ட
மன்றத்தில் கவுண்டர் சமூக
எம்எல்ஏ க்கள் அதிகம் உள்ளனர்.
இந்த சமூகத்திற்கு அடுத்த
படியாக முக்குலத்தோர்
சமூக எம்எல்ஏ க்கள் அதிக
எண்ணிக்கையில் உள்ளனர்.
முதல்வர் கவுண்டர் சமூகத்தை
சார்ந்தவர்.துணை முதல்வர்
முக்குலத்தோர் சமூகத்தை
சார்ந்தவர்.தமிழக அரசின்
முக்கிய துறைகள் அனைத்தும்
இந்த சமூகம் சார்ந்த அமைச்சர்
களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.
அம்மாவின் அதிமுகவில் இந்த
சமூகம் சார்ந்த மக்களே அதிகம்
உள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில்
மாயத்தேவரை நிறுத்தி முதல்
அரசியல் வெற்றி கண்ட பின்
முக்குலத்தோர் சமூக
மக்கள் பெரிய அளவில்
எம்ஜிஆரின் அரசியல்
வெற்றிக்கு துணை புரிந்தனர்.
சசிகலா, நடராஜன், தினகரன்
குடும்பம் அனைத்தும் இந்த
சமூகம் சார்ந்த மக்களேயாவர்.
எம்ஜிஆர் ஆட்சிக்கும் அம்மா
ஆட்சிக்கும் பக்க பலமாக
இருந்தவர்களும் இந்த சமூகம்
சார்ந்த மக்களே ஆவர்.
அதிமுக,அமமுக எல்லாம்
இவர்களாலேயே இன்றும்
நிரம்பி வழிகிறது.

வட தமிழக மாவட்டங்களில்
வன்னியர் சமூக மக்களே
தேர்தல் வெற்றிகளை
நிர்ணயிப்பவர்களாக
உள்ளனர்.அம்மாவின்
அமைச்சரவையில் இவர்கள்
நல்ல பொறுப்புகளை
பலமுறை பெற்றுள்ளனர்
முதலியார், நாயுடு
முத்தரையர்,உடையார்
செட்டியார்,ரெட்டியார்
சமூகம் எல்லாம் அடுத்த
நிலையிலேயே உள்ளன.
முஸ்லிம் கிருத்துவ
சமூகங்கள் இன்றும்
சிறுபான்மை நிலையில்
மட்டுமே உள்ளன.
அதிக எண்ணிக்கையில்
இருந்தும்,வலுவான அமைப்பு
இருந்தும் ஆதி திராவிடர்
சமூகம் தமிழக அமைச்சரவையில்
மிக மிக குறைந்த பிரதிநிதித்துவம்
பெற்றே இன்றும் திகழ்கிறது.

இப்போது சொல்லுங்க...
யாருக்கு வோட்டு போடுவது!
I am a bit confused

What about you!

Vavar F Habibullah

No comments: