தமிழக அரசியல் களத்தில் முக்கியமான பதவிகளை பெறுவதற்காக வெட்கமில்லாமல் பிறர் காலில் விழுந்து எழுவது அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை..
ஆனால் உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைமை மதகுரு போப் ஆண்டகை வன்முறையை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வலியுறுத்தி ஒரு நாட்டின் அதிபர் காலில் விழுந்து கெஞ்சிய நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது...
தெற்கு சூடான் நாட்டில் கடந்த 2013 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகி வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் போப் பிரான்சிஸ ஆண்டகை தெற்கு சூடான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் சல்வா கிர் மற்றும் எதிர் கட்சியை சேர்ந்த ரேக் மச்சார் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்...
இரண்டு தரப்பும் தங்களது நிலையில் உறுதியாக இருந்ததால் போரை முடிவுக்கு கொண்டு வந்து அப்பாவிகளின் உயிரிழப்பை தடுத்திட உங்கள் காலில் விழுந்து கெஞ்சுகிறேன் என்று யாரும் எதிர்பாராது தெற்கு சூடான் அதிபர் காலில் விழுந்து முத்தமிட்டு வேண்டுகோள் விடுத்தார் போப் பிரான்சிஸ...
Colachel Azheem
No comments:
Post a Comment