இது ஒரு பரவசமூட்டும் உணவு சுற்றுலா. மிகவும் வித்தியாசமானதும் கூட. சீனாவில் இருந்து ஐரோப்பா வரை நீண்டிருக்கும் பண்டைய கால தொழிற் வர்த்தக பாதை 'சில்க் ரூட்' என்று அழைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மைல்கள் நீளும் இந்த பாதையில் உள்ள பல்வேறு நாடுகளுக்கும் சென்று அவர்களின் உணவுகளை அறிமுகப்படுத்துவதே இந்த உணவு சுற்றுலாவின் நோக்கம். சில்க் ரூட்டில் உள்ள பெரும்பாலான நாடுகள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளாக காலப்போக்கில் மாறிவிட்டன. மேற்கு சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல.
இரு தினங்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ மேற்கு சீனாவில் இருந்து தொடங்குகிறது. இதனை தொகுத்து வழங்கும் ட்ரிவர் ஜேம்ஸ் தனக்கு ஏற்படும் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வல்லவர். இந்த காணோளியின் நடுவே வரும், அப்பகுதியின் மிகப் பெரிய மசூதியை ஜேம்ஸ் வர்ணிக்கும் போது, அந்த உடல்மொழியின் பரவசம் நமக்குள்ளும் பரவுகிறது. இந்த காணோளியை ரசிக்க மொழி அவசியமில்லை, இருபது நிமிடங்கள் போதும். பார்க்க & ரசிக்க:
வாட்சப்பில் வந்த தகவல்
No comments:
Post a Comment