Wednesday, April 19, 2017

சாதக மனோபக்குவம் ....!

வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் விளைவுகள் இரண்டு வகையாக இருக்கும்.
ஓன்று வெற்றி.
மற்றொன்று தோல்வி.
தோல்வியில் படிப்பினை கிடைக்கிறது அது வெற்றியை நோக்கி முன்னேற வழி காட்டுகிறது.
வெற்றியில் தொடர்து முன்னேற உத்வேகம் கிடைக்கிறது.
போட்டியே வாழ்க்கைமுறை என்பதே பாலர்பள்ளியில் இருந்து
பாடையில் போகும்வரை எடுத்து கையாளும்படியாகவே சமூக கட்டமைப்புகள் பன்னாட்டு சந்தை கொள்ளையர்களால் புகுத்தப்பட்டு சாதாரண மக்களின் மூளை சலவையால் சுத்தமானதாக காட்டப்பட்டு கவரப்பட்டுவிட்டது. இதனால் ஆக்கத்தைவிட அழிவே அதிகமாக இருக்கும். என்றாலும் அதை அறிந்தவர்கள், நான் உட்பட, யாராலும் அதிலிருந்து தம்மை பிரித்துக்கொள்ள முடியாதபடி மாயவலை பின்னப்பட்டுவிட்டது.

இத்தகைய காலகட்டத்தில் எது வந்தாலும் சாதகமாக்கிக் கொள்ளும் மனோபக்குவம் வாழ்க்கையை சீராகக் கொண்டுசெல்ல பெரிதும் உதவும்.
சாதகம் என்பது போன்ற ரூபத்தில் வருவானவற்றால் சுய தேவைகளை மட்டுமே பூர்திசெய்தால் சமூகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தாது. சமூகத்திற்கும் இயற்கைக்கும் பாதகமானவற்றை விளக்கிக்கொள்வதே சாலச்சிறந்தது.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.


சங்கம் செய்கு அப்துல் காதர் 

No comments: