சாந்தியும் சமாதானமும் யாவருக்கும் உரித்தாகுக.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மிருகங்கள்கூட தன்னினத்து சக மிருகத்தை காணும்போது நலம் விசாரித்துக் கொள்கின்றன.
மனிதரில் ஒவ்வொரு பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக்கொள்கின்றனர்.
நான் வசிக்கும் உகாண்டாவில் 56 பழங்குடி இனத்தவர்களும் அவர்களுக்கென தனியான மொழியும், கலாச்சாரமும், பண்பாடுகளும் ஏன், வாழ்த்து சொல்வதும் இருக்கிறது.
அண்டைநாடுகளிலும் அதுபோலவே, அதில் தெற்கு சூடான் உலகின் மிக இளைய நாடு அங்கு வசிக்கும் பல பழங்குடியினரும் தத்தமது மொழிகளில் பேசிக்கொண்டாலும் வெவ்வேறு பழங்குடியினரை இணைக்கும் மொழியாக அரபி பேசப்படுகிறது. அவர்களில் பலரும் எந்த மதத்தையும் பின்பற்றாத மூதாதையர்களை வழிபடுபவர்களாகவும் ஏனையோர் கிருத்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருந்தாலும் அனைவருமே ஒருவருக்கொருவர் அரபி மொழியில் 'அஸ்ஸலாமு அலைக்கும் ' என்றே வாழ்த்து பரிமாறிக் கொள்கின்றனர்.
நேத்து கிருத்துவர்களின் உலகளாவிய தலைவர் போப்பாண்டவரும் தனது பக்தர்களுக்கு ' அஸ்ஸலாமு அலைக்கும் ' என்றே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனித நல்லிணக்கம் உலகெங்கும் நிலவட்டும்.
உகாண்டா நினைவுகள்...!
தொடரலாம்.
No comments:
Post a Comment