Wednesday, April 26, 2017

தாவூதும் கோலியாத்தும்

Vavar F Habibullah 

ஆண்டவனுக்கும் - ஆள்பவனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஆட்சி மாற்றங்கள் நிகழ, ஆண்டவன் தான் காரணமா?

ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் போது அதை தூக்கி எறிகின்ற சக்தி படைத் தவர்கள், மனிதர்களா அல்லது ஆண்டவனா?

ஆண்டவன், நேரிடையாக இவ்விஷயத்தில் தலையிடாவிட்டாலும் மக்கள் மூலமாகவே இதை நடத்தி காட்டுகிறான்.


தாலூத் - ஜாலூத் வரலாறு இதைத்தான் பறை சாற்றுகிறது.
இஸ்ரேல் நாட்டில், கோலியாத்தின் அராஜகம் உச்சத்தில் இருந்த கால கட்டம். எவராலும், அவனை வெல்ல இயலவில்லை. அஜானுபாகுவான மன்னன், தாலூத் கூட அவனை கண்டு பயந்தான். ஆனால் சிறுவன் தாவூத் என்ற தாவீது, கோலியாத்தை தன்னால் வெற்றி கொள்ள இயலும் என்று நம்பினான். மன்னனுக்கே அறிமுகம் இல்லாத அந்த ஏழைச் சிறுவனின் துணிச்சல் கண்டு, மன்னனே வியந்தான். நேருக்கு நேர் நடந்த போரில், ஒரு சிறு கல்லால் அடித்தே கோலியாத்தை வீழ்த்தினான் இளைஞன் தாவீது. அடிமரம் சாய்ந்தது போல் வீழ்ந்து கிடந்த கோலியாத்தின் தலையை, அவனது வாளை கொண்டே வெட்டி வீழ்த்தினான் தாவீது.

அராஜகத்தின் பிடியிலிருந்து தப்பிய மக்கள், தாவீதையே தங்கள் தலைவனாக ஏற்று அரச பதவியை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தினர்.
ஆட்சி மாற்றங்கள் நிகழ, மக்கள் விரும்பினாலும் ஆண்டவன் உதவியின்றி எந்த மாற்றமு ம் நிகழாது என்பது இந்த வரலாற்றில் இருந்து புரிகிறது.

அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட ஆண்டவனே மக்களை தயார் செய்கிறான். மக்கள் மூலமே அதை நிறைவேற்றவும் துணிகிறான்.

நல்ல மனிதர்களை கொண்டே, நல்ல சமுதாயத்தை அமைக்க தவறினால் நாடும் - நாட்டு மக்களும் அழிந்தொழிவதில் இருந்து அவர்களை காப்பாற்ற இயலாமல் ஆகி விடும். வேதங்கள் சொல்லும் கதை இது.

தாவூது - கோலியாத் வரலாறு என்னை மிகவும் சிந்திக்க வைத்த வரலாறு. நாட்டு நடப்பை அலசும் ஒரு அரசியல் வரலாறாகவே இது இன்றும் திகழ்கிறது.


Vavar F Habibullah 

A fighting scene of David and Goliath
https://www.facebook.com/dr.habibullah/videos/10205615557936762/?pnref=story

No comments: