1. வெங்கடேஷ் ஆறுமுகம் ஆண்டாளின் திருப்பாவையை வைத்து அன்றாடம் எழுதிய தொடர்கள்.
2. லியாகத் அலி எழுதிய கட்டுரைகள். இஸ்லாத்தைப் பின்பற்றுவோர் கவனிக்க வேண்டிய விஷயங்களை மென்மையாகக் கடிதுரைக்கும் ஆழமான கட்டுரைகள். முத்தலாக், பர்தா உள்பட முக்கியமான விஷயங்கள்.
3. மரியம் ஜமாலியா எழுதி வரும் பூந்தோட்டம் தொடர். குறிப்பாக அந்த வழக்கு மொழிக்காக. இப்படியொரு வழக்குமொழியை நான் கேள்விப்படுவது இதுவே முதல்முறை.
4. மது ஸ்ரீதரன் எழுதி, எல்லாருக்கும் இலவசமாக அனுப்பி வைத்த கட்டுரைகள். இன்ன வகை என்று இல்லாமல் எல்லாவற்றையும் தொட்டு ராண்டமாக ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு இணைத்து எழுதப்பட்ட கட்டுரைகள். சுஜாதா நினைவு வருவது தவிர்க்க முடியாதது. ஆனால் சுஜாதா எழுத்தில் இருந்த நகைச்சுவை இதில் குறைவு.
இவை எப்படியும் ஒருநாள் புத்தகங்களாக வந்தாக வேண்டும். வரும் என்று நம்புகிறேன்.
(புத்தகம் வரும்போது வரட்டும். நீங்கள் இவர்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கலாம்.)
No comments:
Post a Comment