Friday, December 9, 2016

COPY AND PASTE

Dr.Vavar F Habibullah
எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரை சில விசயங்களில் காப்பி அடிக்கிறோம்.அது இயற்கை.
நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் நம் அருகில் உள்ளோரிடம் இருந்தே முழுமையாக கற்றுக் கொள்கிறோம்.குழந்தைகள் தங்கள்
பெற்றோரிடம் இருந்தே வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை விசயங்களை கற்று தேர்கின்றன.
நம் கல்வி அறிவும் பிறர் கருத்துக்களை
கேட்டறிந்தே விருத்தியடைகிறது. பிறரது படைப்புகளை ரசிப்பது மேற்கோள் காட்டுவது எல்லாம் அறிவு வளர துணை புரிகின்றன.
பிறரது அயராத உழைப்பின் பலனே நாம் இன்று கட்டி காக்கும் பொக்கிஷங்கள், நாம் காணும் பண்பாடுகள், நாகரீகங்கள் புதிய கண்டு பிடிப்புகள் தொழில் நுட்பங்கள் எல்லாம் ஆகும்.

பிறரது எண்ணங்களை கருத்துக்களை பகிரும் சிறு காணொளிக் காட்சியாக இப்போது சமூக வலைதளங்கள் உலா வருகின்றன.
பத்திரிகைகள் மற்றும் மீடியாக்கள் தரும்
தகவல்களை விட அறிவு பூர்வமான
சுவாரசியமான விவரங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்படுகின்றன.
நல்ல எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிவு
ஜீவிகள் என பலரும் தங்கள் எண்ணத்தை தங்கள்நண்பர்களோடுபகிர்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் தனிப் பாணியை கடைபிடிக்கிறார்கள்.
அந்த பதிவுகளை ரசிப்பவர்கள் சிலர், லைக் செய்கிறார்கள்.சிலர் கமெண்ட் செய்கிறார்கள்.
சிலர் ஷேர் செய்து மகிழ்கிறார்கள். சிலர் டேக் செய்து தொல்லை தருகிறார்கள்.சிலரோ
வன் முறையாக திறந்திருக்கும் டைம் லைனில் புகுந்து கபளீகரம் செய்கிறார்கள். நம்மை பிடிக்காதவர் பலரோ சைலண்ட்டாக எல்லா வற்றையும் சமர்த்தாக மேய்ந்து விட்டு தங்களை சற்று ஆசுவாச படுத்திக் கொள்கிறார்கள்
சோசியல் மீடியா இப்படித்தான் இருக்கும்.
இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.
ஆனால் சமீப காலமாக நாம் இடும்
பதிவுகளை எந்த அனுமதியும் பெறாமல் அலாக்காக தூக்கி வந்து அப்படியே தங்கள் பதிவுகள் போல்.... அவர்களது முக பக்கத்தில் அவர்களது சொந்த பதிவுகள் போல் அப்படியே ஒட்டி அலங்கரித்து விடுகிறார்கள்.
ஒப்புக்காக கூட...
இதை பதிந்த ஒரிஜினல் நபரின் பெயரை மறந்தும் கூட தெரியப் படுத்துவதில்லை.
இம்மாதிரி பலமுறை, எனக்கு இந்த அனுபவம் நேர்ந்ததுண்டு.இப்போதும் இது தொடர்கிறது.
அந்த நண்பர்களின் பெயரை நான் வெளியிட தயாராக இல்லை.
ஒரு வேண்டுகோள் மட்டும..
It is not necessary to put the author's name
and no harm in putting your name also on it,
Please don't alter the contents and 
put your own message on it.

Dr.Vavar F Habibullah

No comments: