Thursday, December 8, 2016

ஊடகங்களின்_காழ்ப்புணா்ச்சி!!



தமிழக முதல்வா் செல்வி ஜெயலலிதா அவா்கள் உடலுக்கு #முன்னாள்_தமிழகத்தின்_கவர்னர்_பாத்திமா_பீவி அவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். நான் அதனை பார்த்தேன். ஆனால் ஒரு மீடியா கூட பெயரை உச்சரிக்கவில்லை்
இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் முதல் பெண் தலைமை நீதிபதி பாத்திமா பீவி அவர்கள். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தமிழக கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது. அவ்வளவு சாதாரணமா இவர்களுக்கு ஆகிவிட்டது. அவர்கள் பெயரை உச்சரிக்க கூட முடியவில்லை. இதுவெல்லாம் காழ்ப்புணர்வின் உச்சம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

ஒரே ஒரு அரசியல் நிகழ்வை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாரும், எந்த மீடியாவும் பேசாததால் இந்த நினைவூட்டல்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நேரத்தில் அதிமுக மிகப் பெரிய வெற்றி அடைந்த பொழுது ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னராக இருந்த பாத்திமா பீவி அவர்கள். அப்பொழுது எதிர்கட்சியாக இருந்தவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். அதனால் பாத்திமா பீவி அவர்களை திரும்ப பெற வலியுறுத்தினர். நீங்கள் என்ன என்னை திரும்ப பெறுவது நானே ராஜினாமா செய்கிறேன். சட்டத்திற்கு உட்பட்டுதான் ஜெயலிதாவை ஆட்சி அமைக்க அழைத்தேன். ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எனக்கு யாரும் சட்டம் சொல்லித் தர வேண்டாம் எனக் கூறிவிட்டு பதவியை ராஜினாமா செய்தவர்தான் பாத்திமா பீவி அவர்கள்.
இந்த தருணத்தில் இதனை நினைவூட்டாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.
தமிழகத்தின் முதல் பெண் ஆளுனர் பாத்திமா பீவி அவர்கள் (1997-2001)....
.......
Ali Ahamed AK

No comments: