மறுநாள் காலையில்
----------------------------------நேத்து காலை 11 மணிக்கு போன மின்சாரம் இன்னும் வரல. கொசுவோட ராத்ரி பூரா போராட்டம். தூக்கம் போச்.
விடிஞ்சதும் விடியாததுமா சிடி ரவுண்ட்ஸ். எங்க பாத்தாலும் மரங்கள். வேரோடு சாஞ்சு கெடக்கு. எங்க ஏரியால மட்டும் 60 மரத்துக்கு மேல டவுன். பார்க்ல யாரோ ராட்சசன் சடுகுடு ஆடின மாதிரி இருக்கு.
பக்கத்துல குஷ்பு வீடு. தெரு முனைல இருந்து பாத்தா வீரப்பன் காடு மாதிரி தெரிஞ்சுது. அடுத்தாப்ல மினிஸ்டர் ஜெயகுமார் இருக்கார். அதனால அந்த நேரத்துக்கே ஆபீசர்ஸ் ஆஜர்.
எம்.எஸ்.வி வீட்டுக்கு எதிர்ல ஒரு தெரு. சாந்தோம் ஐரோடையும் ராமகிருஷ்ண மடம் ரோடையும் லிங் பண்ற மந்தவெளி தெரு. எண்ணிகிட்டே போனா 29 மரம் சாஞ்சிருக்கு. அது பெருசுல்ல. 51 மரம் அப்டியே நின்னுது. ஒரு தெரு இப்டின்னா மொத்த சிட்டி ஊகிச்சுக்கலாம்.
எல்லா தெருவுலயும் டீம் டீமா வந்த ஆளுங்க பெரிய எலக்ட்ரிக் பிளேடு வச்சு மரத்த வெட்டி ஓரமா தள்ளிட்டு போய்ட்டே இருந்தாங்க. ஆட்கள் நடக்கவும் டூவீலர் போகவும் கேப் கிடைச்சா அதோட போயிட்றாங்க. க்ளீனப்புக்கு அடுத்த டீம் வரும்னு ஒரு ஆபீசர் சொன்னார்.
பால் சப்ளை பாதிக்காதுனு மினிஸ்டர் சொன்னதா தந்தி பேப்பர் நியூஸ். ஆனா பால் வராம பல இடங்கள்ல கூட்டம் கூச்சல். மின்சாரம்கூட ராத்திரியே குடுத்துருவோம்னு இன்னொரு மினிஸ்டர் தந்தில சொல்லிருந்தார். சொல்லி 18 மணி நேரம் தாண்டியும் வரல.
டீக்கடைல காபி மட்டுந்தான். அதும் பேப்பர் கப்ல. தண்ணி கிடையாது. மோட்டார் போட கரன்ட் வேணுமே. வட போடலியானு கேட்டு நாயர்கிட்ட வாங்கி கட்னாரு ஒரு கஸ்டமர். பெரிய ஓட்டல்லயும் இட்லி, பொங்கலுக்கு சாம்பார் மாட்டுந்தான். நோ சட்னி.
செல்போன் கால வாரினதுதான் பெரிய நியூஸ். நோ நெட்வொர்க். நோ கால், நோ மெசேஜ். புயல் போயாச்சா, ஸ்கூல் உண்டானு தெரிஞ்சுக்கவே வழியில்ல. பேரழிவு வரும்போதெல்லாம் மொபைல் டெக்னாலஜி கைகுடுக்குதுனு சொன்னாங்க. ஒரே நாள்ல மொத்தமும் ஊத்திகிட்டத பாத்தப்றம் நம்பிக்கை போயிருச்சு. பழைய லேண்ட்லைன் போன தூசி தட்டி எடுக்கணும்.
பாலஸ்தீன் குழந்தைகள் துப்பாக்கி சண்டைக்கு நடுவுல ஸ்கூலுக்கு நடந்து போறத பாத்து ஆச்சரியமா இருக்கும். சென்னைவாசிங்க வர்தா புயலோட ஆட்டத்த பாத்தும் பாக்காத மாதிரி சாய்ஞ்சு கிடக்கிற மரங்கள தாண்டியும் குனிஞ்சும் கடந்து போய்கிட்டே இருக்றத பாத்தா அந்த குழந்தைங்க ஞாபகம் வருது.
உயிர் பலி இல்லை அல்லது சொல்ற அளவுக்கு இல்லைங்றது ஆறுதல்.
பசியோட கத்திகிட்டு இருந்த காக்கா, புறாக்கள வாவானு கூப்ட்டு பிரெட் பிச்சு போட்டு அதுங்களோட பேசின பலர பாக்க முடிஞ்சுது.
1 4 3 சென்னை.
No comments:
Post a Comment