Thursday, July 15, 2021

 


Vavar F Habibullah

ஒரு கனவின் வரலாறு

பக்ரீத் என்றால் முஸ்லிம்

மக்கள் ஆடுகளை,மாடுகளை

காளைகளை ஒட்டகங்களை

அறுத்து அதன் மாமிசத்தை

ஏழை எளிய மக்கள் பயன்

பெறும் விதத்தில் தானமாக

விநியோகிப்பார்கள் என்பது

தான் நான் அறிந்த விசயம்...

ஆனால் நீங்கள் சொல்லும் செய்தி

வியக்க வைக்கிறது, டாக்டர்!

அகத்திய முனி மருத்துவமனை

தலைவர், மறைந்த அருட்தந்தை

குரூஸ் ஹிரோனிமஸ், நான்

சொன்ன வரலாற்றுப் பிண்ணனி

கேட்டு வியந்து பாராட்டியது

இன்றும், பசுமையாக நினைவில்

வந்து போகிறது.

அதென்ன வரலாறு...!

பக்ரீத் என்பது இந்திய

மண்ணில் பயன் படுத்தப்படும்

சொல்லாகும்.பக்ரி என்றால்

ஆடு என்று பொருள். ஆனால்

தியாகக் திருநாள் என்பது தான்

பொருத்தமான பெயராகும்.

தியாகம் என்றால்...பெற்ற

மகனை அறுத்து பலியிடுவது!

இப்றாகீம் எனப்படும்  (ஆப்ரகாம்)

நபி,ஒரு இறைத்தூதர் என்பது

இஸ்லாமிய யூத கிருத்துவ

மத நம்பிக்கையாகும்.

இப்ராகீம், ஒருமுறை தனது

ஒரே மகன் இஸ்மாயிலை

இறைவனுக்கு அறுத்து பலி

கொடுப்பதாக கனவு கண்டார்.

கனவை மகனிடம் சொல்ல

மகன், அதற்கு உடன்பட, மக்கா

வின் கஃபா ஆலயத்தில் வைத்து

பலியிட முயற்சித்த போது, இறை

வனால் தடுத்தாளப்பட்டு, மகனுக்கு

பதிலாக ஒரு ஆட்டை அறுத்து

அந்த விசித்திர கனவை நிறைவு

செய்ய இறை கட்டளை பிறந்தது.

இப்ராகீம் கண்ட கனவை நினைவு

கொள்ளும் நிகழ்ச்சியே, முஸ்லிம்

மக்கள் இன்றும் கடை பிடித்து

ஒழுகும் ஹஜ் நிறைவு பெற்ற

நிலையில் நடந்தேறும் இந்த

குர்பானி முறை.

ஹஜ் என்ற இஸ்லாமியரின்

புனித கடமைக் கூட முழுக்க

நாலாயிரம் வருடங்களுக்கு

முன் வாழ்ந்த இப்ராகீம்

நபியின் வணக்கமுறைகளை

நினைவு கூறும்

விதத்திலேய அமைந்துள்ளது.

கஃபா என்ற இறை இல்லத்தை

மக்கா நகரில் கட்டமைத்தவர்

இப்ராகீமும் அவரது மகன்

இஸ்மாயிலும் என்பது வரலாறு.

இப்ராகீம் நபியின் மனைவி

ஹாஜரா தனது மகன் இஸ்மாயில்

நபியின் தாகம்  அறிந்து, நீரைத்

தேடி சபா மர்வா மலைகளுக்கி

டையே ஓடிய ஓட்டம், குழந்தை

இஸ்மாயிலின் பாத விரல் பட்டு

கஃபா மண்ணில்  பீறிட்டெழுந்த

என்றும்  வற்றாத ஜம்ஜம் கிணற்று

ஜீவ நீறூற்று, இப்ராகீம் நபி

நின்று வணங்கிய திருத்தலம்

இப்ராகீம் நபி கடைப்பிடித்து

ஒழுகிய ஒரே இறை வணக்க

நெறி முறைகளே.. முகமது

நபிகளாரால், இறை கட்டளை

படி மாற்றங்களுடன் மக்காவில்

நபிகளாரின் முதல் ஹஜ்ஜின்

போது திருத்தியமைக்கப்பட்டு

உலக முஸ்லிம்களால் இன்றும்

கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

ஹாஜிகள் அணியும் உடை, மறு

உலக வாழ்வை நினைவு படுத்தும்.

மக்காவின் அரஃபா திடல், ஒரு

சைக்கலாஜிகல் கதார்சிஸ்

போன்று, மனம் சுத்தீகரிக்கும் 

பாவ விமோசனம் தரும் மறு

வாழ்வு முறையை போதிக்கும்.

முஸ்தலிபாவில், மேற்கொள்ளும்

தனிமை, தவ வணக்கம்,உறங்காத

தியான இரவு, உலக வாழ்க்கைக்கு

முற்றுப்புள்ளி வைக்கும்.சாத்தான்

மீது கல்லெறிவது, தீய குணம்

தீண்டாத நல்ல மனம் பெற

வழி தரும், ஐந்து நாட்கள்

மக்கா மாநகரில் தொடர்ந்து

நடக்கும் ஆத்ம விமோசன

வணக்க வழிமுறைகள்

மனிதனை புனிதனாக

மாற்றும் வல்லமை பெற்றவை.

தோரா, பைபிள் போன்ற

யூத கிருத்துவ வேதங்கள்

தங்கள் பிதா என்று போற்றி

மதிக்கும்ஆப்ரகாம்திருத்

தூதரை, முஸ்லிம் மக்கள்

நினைவில் வைத்து, இப்ராகீம்

நபியின் ஹஜ் வழிமுறைகளை

இன்றும், மக்கா கஃபா ஆலயத்

தில் தொடர்வது, சமய மத

நல்லிணக்கம் கொண்ட

மேநாட்டு அறிஞர் பெருமக்க

ளின் பேசு பொருளாகவே

இப்போதும் இருக்கிறது.

A talk given by me to the

audience of doctors at

Asian Polyclinic, the famous

Hospital  at Holy Makkah

some years back

dr habibullah



Former member

TAMILNADU STATE

HAJJ - COMMITTEE

Government of Tamilnadu

No comments: