https://www.facebook.com/1487918212/videos/pcb.10220083412704089/331703248575784
என் கடன்
பணி செய்து கிடப்பதே!
80 களில்...
குமரி மாவட்டத்தில்
தக்கலை
நகரில்
ஹபீப் குழந்தைகள்
மருத்துவமனை
என்ற பெயரில்
குழந்தைகள்
சிகிச்சைக்கென்றே
தனி மருத்துவமனை ஒன்றை
நிறுவியதை,
சாதனை என்று
சொல்ல
முடியாது. கடமை
உணர்வு என்று சொல்லலாம்.
அன்று,
குமரி மாவட்டத்தில்
விரல் விட்டும் எண்ணும்
நிலையில்
மட்டுமே
குழந்தை
நல சிறப்பு
மருத்துவர்கள்
இருந்தனர்.
குறிப்பாக
சொன்னால்
நாகர்கோவில்
நகரில்
டாக்டர்
பாலு,டாக்டர்.மெர்லின்,
மார்த்தாண்டம்
நகரில்
டாக்டர்
டேவிட்,தக்கலை நகரில்
எனது மருத்துவமனை ஒன்று மட்டுமே
இருபது
படுக்கை வசதி கொண்ட
குழந்தைகளுக்கான
சிறப்பு
மருத்துவமனையாக
திகழ்ந்தது.
ஐசியு,
என்ஐசியு, ஃபோட்டோ
தெராபி
யூனிட், இன்குபேட்டர்
வசதிகள்
கொண்ட மாடர்ன்
மருத்துவமனையாக அது
அன்று திகழ்ந்தது. உயிர்
காக்கும்
சிறப்பு மருத்துவ
வசதிகள்
பெரிய அளவில்
இல்லாத
அன்றைய நாட்களில்
உயிருக்குப்
போராடிய
எத்தனையோ
பச்சிளம்
குழந்தைகளின்
உயிர்
காத்த பெருமை இந்த
தக்கலை,
ஹபீப் குழந்தைகள்
மருத்துவமனைக்கு
உண்டு.
எம்ஜிஆர்
ஆட்சி காலத்தில்
இந்த மருத்துவமனைக்கு
விசிட்
செய்யாத அமைச்சர்
களோ,உயர் அதிகாரிகளோ
இல்லை எனலாம். அந்த
நாட்களில்,
அரசுடன் இணைந்து
எண்ணற்ற
மருத்துவ முகாம்களை
ஊரெல்லாம்
நடத்திய பெருமை
இந்த மருத்துவமனைக்கு உண்டு.
அந்த நாட்களில் மருத்துவம்
படிக்க
என்னை ஊக்குவித்த
என் தந்தையை நான் இன்று
நினைவு
கூறுகிறேன். அன்று
இடலை அரசு பள்ளியில் தமிழ்
மீடியத்தில்
படித்து மருத்துவக்
கல்லூரியில்
இடம் பெற்றதை
சாதனை என்றே சொல்ல
வேண்டும்.
நீட் இருந்தால்
இது முடியுமா என்றால்
ஐயப்பாடு
தான்.
சரி...பெரிய சாதனை தான்!
பழையவற்றை
நினைவு
கூர்ந்து
இப்போது என்ன
பயன்! வயது 75 ஆகி விட்டது.
கொரோனா
காலம்...
நிம்மதியாக
ரெஸ்ட் எடுங்கள்
என்று நீங்கள் சொல்வது
கேட்கிறது.
நமது தொழிலில்
ரெஸ்ட்
என்பது இல்லை சார்!
மருத்துவ
சிகிச்சைக்கு
என்னை,
இன்றும் தேடி வரும்
எனது இளம் வயது பேசியண்ட்ஸ்
இருக்கும்
வரை…..ஓய்வேது!
விரைவில்,
நாகர்கோவில் நகரில்
ஹபீப் சைல்ட் அன்ட் டீன்ஏஜ்
கிளினிக்
ஒன்று விரைவில்
ஆரம்பமாக
இருக்கிறது என்ற
நற்செய்தியை
உங்களோடு
பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சி.
உயிருக்கு
போராடும் ஒரு
குழந்தையின்
உயிரை
காப்பாற்ற
இயலும் என்ற
உயர் எண்ணம் மட்டுமே
உயிர் வாழ்வதில்
ஒரு
அர்த்தத்தைத்
தருகிறது.
At the moment, I am not
treating the President
and Prime Minister of the
Country but the future
Presidents and prime ministers
of the country,
because
‘Child is the Father of Man’
Senior Consultant Paediatrician
No comments:
Post a Comment