Sunday, July 11, 2021

முதல் 🔟 துல் ஹஜ் முறையாய் பெறுவோம்

 


Noor Saffiya

💞 இறைசிந்தனை

       முதல் 🔟 துல் ஹஜ்

  முறையாய் பெறுவோம்!

_ ல்லாஹ்வே உன்

அருள் மழை பொழிந்தே!

அடைக்கலமாய் காத்து,

அள்ளி மகிழ்விப்பாயே!

அதற்கான உறுதிமொழியில் அழகிய உளத்தூய்மையோடு

அணிவகுத்து உன்னில்

அமலை நிரப்புவோம்!

_ னந்தம் அடைந்திடவே!

ஆற்றலினை அருவி நீராய்!

ஆன்மீக வாழ்வுடனே!

ஆக்கம் பெற செய்வாயே!

ஆதிக்க நாயனே! நாங்கள்

ஆரம்ப நாளிலே நோன்பும்,

ஆசையோடு சுன்னத்தினை

ஆர்வமாய் செய்கிறோம்!

_ வ்வுலக வாழ்வினிலே!

இன்னல் இல்லாமலே!

இன்பம் நிலைத்திட்டே!

இறை அச்சத்துடனே!

இரக்கம் கொள்வாயே!

இரியலாய் விரைந்தே

இறையில் அர்ப்பணமே!

இரசூல் சொல் செயல் சமர்ப்பணமே! என்றே,

இரியல் _ (அச்சத்தால்,அழுதல்)

_ ருலக வாழ்வினிலே!

ஈமானின் விதையினிலே!

ஈந்திடும் பொழுதினிலே!

ஈவு இரக்கமான வாழ்வோடு!

ஈடேற்றம் அடைய செய்வாயே!

ஈகை திருநாள் முன்னே

ஈர்ப்போம்! ஈரக்குலை நபி

ஈரத்தில் நனைந்திட்டே!

_ ம்மத்தின் சிறப்பே!

உன்னில் பணிந்திட்டே!

உமிழ் நீரும் உன் புகழிலே!

உறுதிமொழியாக்குவாயே!

உற்றார் இனபந்து

உதவாத நிலையானாலும்!

உன் உதவிக்கெனும்

உபகாரம் கேட்கும்

உன்னத அமல் செய்வோம்!

_ ர்கதை ஃபஷாது ஃபித்னா

ஊருணி நாவில்லாது!

ஊமையாய் அமைதி

கல்பாக்கிடு!

ஊழ்கம் தன்மை தந்திடு!

ஊசிகாதாய் நுட்பமாக்கிடு!

ஊழ்கம்(தியானம்)

ஊண்,உறக்கம் தூராக்கி

ஊர்ஜிதமாய் செய்வோம்!

_ ழில் அழகு  ராஜரே!

எட்டுதிக்கும் நும் ஒளியே!

எடுத்து வைத்தான் ரப்பே!

எம்முள்ளே மிளிரவே!

எந்நிமிடமும் நிரந்தரமாய்!

எல்லாம் வல்லிறைவா தருவாயே!

எதிர்முலியாய் சந்திக்க யா ரப்!

எம்மால் முடிந்தளவு அமல்

எதேஷ்டமாய் செய்வோம்!

எதிர்முலி (நேருக்கு நேர்)

எதேஷ்டம்(இஷ்டம்)

_ காந்த ராகமாய்!

ஏற்றமிகும் சலவாத்தாய்!

ஏற்றம் ஆக்கும் வாழ்வாய்!

ஏகோனே! நிரப்பிடுவாய்!

ஏல கல்பை தெளிவாக்கி

ஏந்தலர் சொன்ன

அஸ்ருல் அழ்ஹா

தயார் செய்தோம்!

ஏக்கம் தீர்த்திடவே எம்மை!

ஏறெடுத்து பார்த்திடவே!

ஏங்கி அழும் கல்போடே!

ஏந்துகிறோம் உன்வாசலிலே!

ஏல (முன்னமே)

அஸ்ருல் அழ்ஹா

(ஹஜ்  மாத முதல் 🔟)

_ யகோ என பதரும் நாளிலே!

ஐய்யனில் தஞ்சமன

ஐக்கிய நிலையாக்கிடு!

ஐவேஜு(சொத்து) நீயே

எனும் கதியாக்கிடு!

ஐந்தொழிலும் முழுமை

நன்மையாக்கிடு!

ஐஸ்வரியமான உன்

நெருக்கமாக்கினோம்!

ஐம்பொறியும் உன்னில்

அடக்கமாக்கினோம்!

ஐவகை ஒழுக்கமும்

ஐய்யபாட்டில் நிலைத்தோம்!

ஐம்பொறி

(ஐம்புலனடக்கம்)

_ ற்றுமை எனும் கயிறு

ஒருங்கிணைந்த கல்பாய்!

ஒவ்வொரு கல்பிலும்

ஒருவனாக எம்மை!

ஒதுக்காது சேர்த்து வாழும்!

ஒருவனே உன்னில் பெறும் ஒவ்வொரு பாக்யமாவோம்!

ஒருபடு நிலையாய்

ஒருநாள் விடாது!

ஒவ்வொரு அமலும்

ஒழுங்குடன் செய்வோம்!

ஒருபடு(உடன்படிதல்)

_ தவும், தொழுகவும்!

ஓயாது நற் சொல்,செயல்!

ஓங்கும் கல்பாய் வாழ!

ஓதிய மற்றையஅமல்

ஏற்பாய்!

ஓட்டையான பானை

ஆகாது காப்பாய்!

ஓடும் மூச்சுவரை செய்யும்

ஓவியனாய் அச்சடித்த

ஓர் சீர்செய்த உம்மத்தாய்

ஓர் முத்திரை பதிப்பாய்!

ஓலைசருகுபோல்

ஆக்காது காப்பாய்!

ஓட்டைவாயாகாது

அமானிதம் காப்போம்!

ஓரம் கட்டுவோம் கல்பிலே

தீயது அனைத்துமே!

_ டதராகம் போல்

சுவரங்களாய் இன்புறும் தொழுகையும்!

ஔரிதம் தர்ம நூலாய்

அள்ளி வழங்கியும்!

ஔதாரியமாய் நற் சொல்,செயலுக்காகவும்!

ஔவை எனும் உணர்வு

அனைவரிலும் அன்னையாகவும்!

ஔலியா தன்மையில்

ஆள வாழ அனுபவித்து

ஔலியாவாக்குவாய்!

ஔதும்பரம் போல்

ஆழ்மனவேராய்!

ஔசீரம் கபுராக்க

இஸ்திஃபார் செய்வோம்!

ஔதும்பரம் (அத்திமரம்)

ஔசீரம்(கவரிமான் படுக்கை)

ஔதும்பரம் (அத்திமரம்)

_ இவ் வெழுத்து போல்

முன்னும் பின்னும்

இறைரசூலில் சார்ந்தும்!

போர் ஆயுதத்தின்

அடையாள சின்னமாய்

கேடயமாய் காப்பதுபோலும்!

முவ்வுலக கேடயமா

ஆக்கிடுவாய்!

வல்லின எழுத்தின்முன்

மென்மை போல் ரப்பே

வஞ்சித்த பாவம் மன்னிப்பாய்!

இரு பெருநாளிடையே

ஜிஹாதின் பலனிற்க்கே!

முன்றாம் புள்ளி ஜென்னாவிற்க்கே!

முக்கால இன்பத்திற்க்கே

முஹப்பத்தாய் செய்வோம்!

ஒவ்வொரு அமலுமே!

ஒவ்வொன்றாய் தேர்ந்து!

ஒன்று விடாது செய்வோம்! ஒரு செகண்ட் தாமதிக்காது!

ஒவ்வொரு நிமிடமுமே!

ஒருவனின் ரஹ்மத் நிறைந்த,

ஒரு புனித ஹஜ் நாளையே!

ஒதுக்கி தந்த 10 நாளுமே!

ஒழுங்காய் செய்வோம்!

ஜிஹாதின் நன்மை முழுதும்!

ஜீனத்தாய் பெறுவோம்!

ஜீவனில் தீயதை தூராக்கி!

ஜிஹாதாய் பாவம்

கழிப்போம்!

      அஹ்மதரின் ஸலவாத்

          துதித்து நாவினில்

                நனைவோம்!

                     آمــين.آَمِيـٍـِنْ آَمِيـٍـِنْ  

                     يَآ رَبَّ آلٌعَآ لَمِِيِنْ  !🌹

                    يارحمة اللعالمين !🌹

                 🤲🤲🤲🤲🤲

                   💞 يامُحَمَّدٍ 💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: