Sunday, July 25, 2021

Dr.ஜவஹர்அலிக்கு கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளார்கள்*

 



*அல்ஹம்துலில்லாஹ்*

நமது நீடூர் மருத்துவர் Dr.ஜவஹர்அலி  அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பனி செய்வதை நாம் அறிவோம்.

கொரோனா காலகட்டத்தில் இரவு  - பகல் பாராது சிறப்பாக பனி செய்ததால் அப்போதே UAE அரசு பாராட்டி கௌரவித்தது.

மேலும் ஓர் சிறப்பாக இப்போது தொழில் அதிபர்கள், உயர் செல்வந்தர்களுக்கு என பிரத்தியோகமாக *கோல்டன் விசா* அளிக்கப்படும் அவர்கள் ரெஸிஸ்டன்ட் பர்மிட் உடையவர்கள்.

*இன்று நமதூர் Dr.ஜவஹர்அலிக்கு கோல்டன் விசா கொடுத்து கௌரவித்துள்ளார்கள்*

அவர்களின் பனி மேலும் சிறக்க துவா செய்வோம்.

நமதூரின் (நீடூர்) மருத்துவர் அயல் நாட்டில் பணிபுரியும்

 Dr ஜவஹர் அலி கொரானா மருத்துவ பணியில் ஓய்வின்றி! இவரின் பணி சிறக்கவும் பாதுகாப்பானதாக இருக்கவும் உற்சாகப்படுத்தி இறைவனிடம் துஆ செய்யுங்கள்.

அல்லாஹ் டாக்டர் ஜவஹர் அலிக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் அவனது அருட்கொடைகளை தந்தருள்வானாக. ஆமீன்

டாக்டர் ஜவஹர் அலி M.D (Specialist in Anaesthetic) 1997 வருடம் பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் Gold Medal வாங்கியவர். குவைத் நாட்டில் சில காலம் பணியாற்றி வந்தார். தற்சமயம் U.A.E. யில் புஜைரா அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். நீடூர் முன்னாள் டிரஸ்டி முஹம்மது ஜுபைர் சாகிப் அவர்களின் பேரனும் M.சர்புதீன் அவர்களின் மகனும் ஆவார். M.A.P. குடும்பத்தினர் ஆவார்.

படம் Dr ஜவஹர் அலி

 

No comments: