Thursday, July 8, 2021

வாழ்த்துக்கள் Jamesha Habib மகனார் தம்பி டாக்டர் அகீல் அவர்களுக்கு

 





வாழ்த்துக்கள்  Jamesha Habib மகனார் தம்பி டாக்டர் அகீல் அவர்களுக்கு

ஒரு நேர்மையான டெபுடி கலெக்டர் மகனாக இருந்து , படித்த பெண்மணிக்கு கணவனாக வாழ்ந்து கொண்டு பெரிய மகன் மருத்துவர் ஆனதை பார்த்து மகிழ்ந்து , சின்ன மகன் அனைத்து துறையிலும் சகல கலா வல்லவனாக இருப்பதை பார்த்து ரசித்து வாழும்  நான் ...

உங்கள்

"இணைய முத்தவல்லி"

"முக நூல் சுல்தான்"

Jamesha Habib(Home Planners)

( உங்களின் ) ஆஃப்லைன் வாழ்க்கைகாக ஆன்லைனில் உலவும் ( வரைபட ) தொழிலாளிகளுள் ஒருவன்!

Jamesha Habib

----------------------

இன்று எனது மகளுக்கு தடு்ப்பூசி போடுவதற்காக RMMCH சென்றிருந்தேன் அங்கிருந்த டாக்டர் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார் ஊசி எனக்கில்ல எனது மகளுக்குதான் தடுப்பூசி போடனும் என்றேன் திரும்பவும் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார் அப்துல் ரியாஸ் என்றேன் உடன் நான் தங்களுடைய #முகநூல் நண்பர் Jamesha Habib அவர்களின் மகன் #டாக்டர்_அகீல் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்...சந்தோஷமாக இருந்தது

Abdul Riyaz

==================

Mohamed Rafiudeen அவர்களின்  பதிவு🤗🤗

நியாயமா பார்த்தா டாக்டர்ஸ் டே அன்று எழுதி இருக்க வேண்டிய மேட்டர் இதுநண்பர்  Abdul Riyaz  அவர்கள் இன்னைக்கு போட்ட பதிவுல இந்த போட்டோவை பார்த்ததும்தான் க்ளிக் ஆச்சுமிக பெருமையான விஷயம்இந்த படத்துல நண்பரோட இருக்கறது.. இளம் டாக்டர் அகீல்நம்மோட முகநூல் நண்பர் Jamesha Habib அவர்களோட  பையன்

தடுப்பூசி போடப்போன ரியாஸ் பாய்ட்ட தானாக வந்து நீங்க என் அத்தாவோட முகநூல் நட்புதானே அங்கிள்னு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு உதவிய  அந்த குணம்மாஷா அல்லாஹ்வெரி கைண்ட்… !

இதுல ரெண்டு விஷயம்ஃபர்ஸ்ட் முகநூலோட பவர்இதுல ஏற்படற நட்புகள் குடும்ப உறவுகளாகவும் மாறிப்போற அதிசயம்ஓப்பனா சொன்னாஎனக்குமுகநூல் மூலம் அறிமுகமாகிநெருங்கிய உறவா  ஆகி இருக்க வேண்டியசில பலநட்புகள்இறைவன் நாட்டம் இல்லாததால்நட்பாகவே இன்றும் தொடர்கிறோம்..பட் அதே அன்போடு…. இன்றும் குடும்ப உறவுக்கு மேல் அன்பாக  தொடரும் நண்பர்களை உலகம் முழுவதும்தந்தது முகநூல்

சரி அடுத்துநம் சமூகத்தில் ஒரு இளைஞன்.. மருத்துவராக.. பல வித அழுத்தங்களை சந்திக்கும் நடுத்தர குடும்பத்து முஸ்லிம்களின் கனவு  அது! நம் வீட்டில் ஒருத்தர் ஆனது போல்உயர் பதவிகளில் நம் இளைஞர்களை பார்க்கும்போது மனம் விம்முது….

இந்த இடத்துல ஒரு வார்த்தைஇயக்கங்கள் ஜமாத்களுக்குஇளைஞர்களுக்கு வழிகாட்டி எவருமில்லைதங்கள் தாய் தந்தையை தவிரஅதனாலேயே பலர் சாதிக்க முடிவதில்லைஇயக்கங்கள்இளைஞர்களால் ஆனது…. வெறும் மைத்தாங்கொல்லையில் சண்டை போடவும்இறந்தவர்களை அடக்கம் பண்ணி நன்மைகளை அடைய வழிகாட்டும் தலைவர்கள்அவர்களின் எதிர்காலத்துக்கும் வழிகாட்டணும்..

தங்கள் இயக்கங்கள் ஜமாத்களில் படித்தவர்களை கொண்டு ஒரு குழு அமைத்துநம் இளைஞர்களின் கனவுகளை தேவைகளை நிறைவேற்ற முன்வரணும்….அவர்களின் சக்திகளை விழலுக்கு இறைத்த நீராக ஆக்காமல் அதை முன்னேற்றப்பாதையில் திருப்பி விடணும்!

நம் இளைஞர்களின் முன்னேற்றமே நம் சமுதாயத்தின் முன்னேற்றம்!

வாழ்த்துக்கள் தம்பி டாக்டர் அகீல்!💐💐

Mohamed Rafiudeen

No comments: