Friday, February 8, 2019

when heart fails, it cries and says....I am too tired

Vavar F Habibullah

சொந்தக் கருத்து
(சில உண்மைகள்)

நமது நாட்டில்
பொதுவாகவே
(எவ்வளவு பெரிய
பதவியாக இருந்தாலும்)
ரிடைர்மெண்ட் ஆனவர்களை
சமூகம் மதிப்பதில்லை.

80 வயதை தாண்டியவர்கள்
முதுமையின் காரணமாக பல
நோய்களின் பிடியில் சிக்கி
தவிப்பது, நிலை குலைவது
என்பது இயற்கை நியதி.
இதயம்,மூளை,சிறுநீரக
குறைபாடுகள் இந்த வயதில்
நிகழ்வது நார்மல் தான்.


87,89 வயதை தாண்டிய
முதியவர்களுக்கு இதய
அறுவை சிகிச்சை
(மிட்ரா கிளிப்) பலன்
தருமா..2 முதல் 30 லட்சம்
வரை செலவு செய்தாலும்
பின் விளைவுகளை தவிர்க்க
இயலுமா..!!இவ்வளவு பெரும்
தொகையை முதிய வயதை
கடந்த ஒருவருக்கு பீஸாக
செலுத்துவது யார்..!
அந்த வயது முதிர்ந்தவர்களை
இதய அறுவை சிகிச்சை
அல்லது பெரிய அறுவை
சிகிச்சைக்கு பின்,
நெருக்கடியான
வாழ்க்கை சூழலில்
தொடர்ந்து கண்காணிப்பது
அல்லது பாதுகாப்பது யார்.!

80 களில்....
நாகர்கோவில் நகரில்
டாக்டர் குருப் MRCP FRCP
என்ற ஹார்ட் ஸ்பெசலிஸ்ட்
இருந்தார்.ஹார்ட்
பேசியண்ட்ஸ் களை
அந்நாட்களில் நான்
அவரிடம் அனுப்புவது
வழக்கம்.லண்டனில் படித்த
டாக்டர் ஆனாலும் பிலாஸபர்
போன்றே பேசுவது அவரது
வழக்கம்.அவர் சொல்வார்..
when heart fails, it cries
and says....I am too tired
அன்றைய இளம் வயதில்....
உண்மையை உரக்க
சொல்லும் அந்த இதய
நோய் நிபுணரை விமர்சன கண்களோடு பார்த்த
எனக்கு அவர் சொன்ன வார்த்தைகளில் மறைந்துள்ள உண்மை இன்று புரிகிறது.

Vavar F Habibullah

No comments: