அழகான விடியல்! ஜன்னல் கண்ணாடிகளுக்குள் நின்று மைனஸ் டிகிரி குளிரில் ரெண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து விடிகாலை வசந்தத்தை சவுண்ட் இல்லாத ஊமைப்படம் போல பார்த்தே பழகிய கண்களுக்கு புதிய அனுபவம்! சொந்த ஊரு! வாசலில் கைலி பனியனுடன் மெல்லிய சிலு சிலு காற்று! மரங்களின் கிளைகளில் குருவிகளின் கீச் கீச் சங்கீதம்!
பஜ்ர் தொழுகை முடிந்து இரண்டு பள்ளிகளிலிருந்து இரண்டு திசைகளிலும் இருந்து வரும் பயான் சப்தங்கள்! மனைவி தந்த அருமையான டீ! தூரத்துல எதோ ஒரு கோயில்ல நடக்கும்
அர்சசனையின் ஒலி! என் நாடு என் மக்கள்! ஆயிரம் வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையா இருக்க முயன்று கொண்டே இருக்கும் மனிதர்கள்!
அதை கெடுக்க முயன்று கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்!
அதிகாலை ஒரு அற்புதம்! தெரியாமலா விடிகாலை எழுந்து இறைவனை வணங்கி நம் நாளை துவக்கணும் என்று எந்த மார்க்கமும் வலியுறுத்தாத ஒரு வழிமுறை நம் மார்க்கத்தில் வந்திருக்கும்? விடிகாலை விழிப்பு ஆரோக்கியத்தின் அளவுகோல்!
மனது உற்சாகமாக இருக்கும்! தெளிவான சிந்தனை பிறக்கும்! நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம் நாட்டுக்கும் கூட எதாவது செய்யணும் என்ற எண்ணம் பிறக்கும்!
அதானே? பொறந்ததில் இருந்து இந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தோம்! என் மக்களுக்காக என் பங்கு என்ன? ஏன்? அதை இன்றே, ஏன் இப்பவே செஞ்சா என்ன?
என்ன வெளையாடறீங்களா? இது என்ன மேஜிக்கா? இல்லை! நம்மால் முடியும்!
இந்த நாட்டுக்காக மக்களுக்காக என்னால் நிச்சயம் இந்த நொடி மிகப்பெரிய நன்மை செய்ய முடியும்! இந்த ஒரு வார்த்தை என் தேசத்தை ஒற்றுமையாக்கி சகோதரத்துவம் நிலைக்க செய்யும்னா ஆயிரம் முறை சொல்வேன்! நீங்களும் சொல்லுங்களேன்!
Mohamed Rafiudeen
No comments:
Post a Comment