....
மலக்குகள் நமது வருகை குறித்து எழுதும் புத்தகத்தை மூடி வைப்பதற்கு முன்னர் நாம் ஜும்மா தொழ பள்ளிக்குள் நுழைந்தால் நன்மைகள் உண்டு என்றாலும் ஜும்மா உரையை கவனமாக செவிமடுத்தால் கூடுதல் நன்மைகளை நமக்கு அல்லாஹ் வழங்குவான் என்பதையும் நாறிவோம் ....
சில இமாம்களின் ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்கவிடாமல் தூங்க வைக்கும் சிலரது ஜும்மா பிரசங்கம் நம்மை கேட்பதற்கு ஏங்க வைக்கும் ....
உகாண்டாவிலும் இது விதிவிலக்கல்ல பல இமாம்கள் இவ்வாறாக இரண்டு வகையாக உரையாற்றுவார்கள் ....
வெளிநாட்டு மொழிகள் முழுமையாக நமக்கு தெரியாவிடினும் இமாமின் நயமான சொல்லடுக்கும் உடலசைவு தோரணையும் பேசுகிற விதமும் குரலும் நமது கவனத்தை ஈர்க்க வழிகள் ஏற்படுத்தும் ....
எங்களது 'முக்வானோ தொழிலக' பள்ளிக்கு வருகையளித்த இன்றைய இமாம்
'குல்லு நப்ஸின் தாயிகத்துல் மெளத்' என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் மிக அருமையான உரையாற்றினார் ....
தாயின் கருவறையில் மனிதன் உருவாகும் நிலையிலிருந்து பூமியில் பிறந்து வாழ்ந்து மறையும் வரையிலும் நிகழும் விஷயங்களை அழகாக தொடுத்து கேட்போரின் செவிக்குள் எடுத்து வைத்தார் ....
சுவாசிக்காமல் உண்ணாமல் பார்க்காமல் இறைவனின் கட்டுப்பாட்டில் இயங்கி நமது தாய் சுமக்கும் கருவறையில் நாம் உருவாகி நீரில் நீந்தி பூமியை தரிசித்த பிறகு வாழும் வாழ்க்கைக்கு பின்னர் நமக்கு 'சுவர்க்கமா நகரகமா' என்பது நமது விருப்பத்துக்கு ஏற்ப நாம் செய்கிற செயல்களால் நிர்ணயிக்கப்படும் என்றார் .....
தொடர்ந்த பேசிய இமாம் நாம்
ஒவ்வொருவரும் மரணிக்கும் தருவாயில் நாம் அனுபவித்த உலக விஷயங்கள் எல்லாம் நமக்கு கசக்கும் என்று முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் உதிர்த்த போதனைகளை சிற்சில உதாரணங்களோடு அடுக்கி விளக்கினார் ....
B (Birth) D (Death) இவைகளுக்கு இடையில் இருக்கும் C (Choice) நமது வாழ்க்கை என்று வித்தியாசமாக எடுத்துரைத்தார் ....
உங்களது முப்பது நிமிட பிரசங்கம் அருமையாக இருந்தது என்று தொழுகை முடிந்து இமாமை நான் பாராட்டி உங்களை குறித்து சொல்லுங்கள் என்றதும் தாம் 'உகாண்டா முஸ்லீம் சுப்ரீம் கவுன்சில்'
இயக்குகிற அரபி பள்ளிக் கூடங்களின் பொறுப்பாளர்களில் ஒருவர் என்று தம்மை என்னிடம் அறிமுகம் செய்தார் ....
இமாம்களுக்கும் தொழுவோருக்கும் இறையருள் பெருகட்டுமாக ....
அப்துல் கபூர் Abdul Gafoor
08.02.2019 ....
No comments:
Post a Comment