Saif Saif
ஏன் இறைவன் மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டும்..!?
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தால் இறைவன் எத்தனை நல்லவன்..!?
சில நேரங்களில் தோன்றும் எண்ணங்களில் விரியும் சிந்தனைகள் இறைவனின் எண்ணத்தை தெரிந்துக் கொள்ள விருப்பம் கொள்கிறது..!
எப்போதுமே சந்தோஷமாக இருப்பவன் இறைவனை நினைத்து பார்க்க நேரம் ஒதுக்குவானா.!?.இல்லை சந்தோஷங்களில் மூழ்கி திளைப்பானா.!?
ஒரு பிரச்சினை ஒரு துன்பம் வரும் போது தான் தன்னை அதிகம் நினைத்துப் பார்ப்பான் என்பதை அறியாதவனா இறைவன்..!?
இப்படி துன்பங்களை கொடுத்து தன் பக்கம் திசைதிருப்புவதில் இறைவனுக்கு என்ன அலாதி இன்பம் இருந்து விடப் போகின்றது..!?என்ற கேள்வி சாமான்ய மனித மனங்களில் எழாமலில்லை.
சாதாரணமாகவே ஒருவனால் இன்னொருவனுக்கு ஆதாயம் இருந்தால் தான் அவனை பற்றிய நினைவே அடுத்தவருக்கு வருகிறது..
அப்படி இருக்கும் போது நம்மை ரெம்பவும்
சுகமாக இறைவன் வைத்திருந்தால்
அவன் நினைவு வருமா..சிந்தனைகள் தூண்டப் படுமா..!?
இப்படி ஒரு கேள்வி வரும் போது அவன் நினைவு இல்லாத பலபேர் இங்கு சந்தோஷமாக இருக்கவில்லையா.!?
என்ற எதிர் கேள்வி வருவதை தவிர்க்க முடியாது..
ஆனால் அப்படிப் பட்டவர்களுக்கு அந்த சிந்தனையை
இறைவன் கொடுக்க விரும்பவில்லை..
அவர்களை பற்றி இறைவன் கண்டுக் கொள்வதும் இல்லை..
அவர்களுக்கு இந்த உலகத்தை சொர்க்கலோகமாகவே
காட்டி விட்டான்..!?
ஏன் நிராகரிப்பவர்கள் பலபேர் இவ்வுலகில் படாபோகமாக வாழவில்லையா என்ன..!?
அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட்டான் என்று தான் இதில் கருத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி இருப்பவர்கள் சைத்தானின்
வலையில் இருந்து இன்னும் மீளவில்லை.
என்பதை உணர்ந்து சுதாரித்துக் கொள்ள முயற்ச்சி எடுக்க வேண்டும்..!
நமக்கு விருப்பமானவர்கள் நம்மை கண்டுகொள்ளாமல் முகத்தை திருப்பி போனால் எவ்வளவு வேதனை கொள்கிறோம்..
நம்மை படைத்து நம்மை விட பன்மடங்கு பாசம் வைத்த இறைவன் அவனை அதிகமாக திரும்பி பார்க்க சில சோதனைகளை
அவன் விரும்புவர்கள்
மீது சில நேரங்களில் விரும்பிச் செய்து விடுகிறான்..
இவ்வுலகில் படும் வேதனைகளும்,சோதனைகளும் மென்மேலும் நம்மை பக்குப்படுத்தி நம் அக அழுக்குகளையும்,புற அழுக்குகளையும் துடைத்து தூய்மைபடுத்தி இறைவன் பால் கொஞ்சம் கொஞ்சமாக
நகர்த்திச் செல்லும்
நல் காரியத்தை இறைவன் கையாள்கிறான் என்பதை நல்லவர்கள் புரிந்துக் பொறுமைக் காக்க வேண்டும்..!
அப்படிப்பட்ட ஒரு பக்குவ நிலையை மனம் ஏற்று கொள்ளும் போது வரும்
நிம்மதி நம் சோகங்களை
கூட சுகமாக்கும்.நம் வாழ்வையும் வளமாக்கும்.
நமக்கு முன்னால் வைக்கப்படும் பரிட்சைகளில் பொறுமையைக்
கொண்டு இறைக்கனியை பரிசாகப் பெற்று அதை அவன் மனதளத்தில் பதிந்து விட்டால்,
அந்த நிரந்தரமான மறுமை உலகில் நாம் நம் சந்தோஷங்களை மட்டுமே எப்போதும் இரு கரம் நீட்டி வரவேற்று மகிழ்பவராக இருக்கலாம்..
#இன்ஷாஅல்லாஹ்.
No comments:
Post a Comment