Wednesday, January 24, 2018

திருமண வாழ்த்துக்கள் ....



இனியவர்களே ....
உகாண்டா தேசத்தில் கோட்டாறு இடலாக்குடி ஊரிலிருந்து எண்பதில் கால்கள் பதித்த முதல் ஐவர்களில் ஒருவரும் ....
உகாண்டாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான முக்வானோ தொழிலகத்தின் சந்தை மற்றும் விற்பனை ஆகிய பெருந் துறைகளின் பொது மேலாளரும் ....
உகாசேவா அமைப்பின் ஆரம்ப கால ஆலோசகரும் மதிப்பிற்குரிய ஆஸ்தான மூத்த உறுப்பினரும் ....
முகநூல் பெருங் கடலில் தமது சிந்தையின் சொல்லெடுத்து சிந்தனையில் வில்லெடுத்து கவிதையெனும் அம்புகளை ரசனையாய் எய்பவரும் ஆப்பிரிக்க பயணக் கட்டுரையாளருமான அன்பிற்குரிய நண்பர் சங்கம் வாவுபிள்ளை ராஜா அவர்களது அன்பு மகளின் திருமணம் இறையருளால் புதனன்று (24.01.2018) கோட்டாறில் இனிதாய் நிகழ்ந்தேறியது ....

இருமனமாய் இணைந்து ஒருமனமாய் சங்கமிக்க இறைவன் அளித்த வரங்கள் பெற்று உறவுகள் வாழ்த்தெனும் உரங்கள் தூவிட இல்லற வாழ்வுக்கு கரங்கள் பற்றிய அன்பான மணமக்கள் பண்பான குணமக்களாய் மகிழ்வோடு வாழ்ந்திட வல்லோன் இறைவன் அருள்வானாக ....
முக்வானோ தொழிலகம் உகாசேவா அமைப்பு முகநூல் தளம் சார்ந்த நட்புகள் யாவரும் உளமார வாழ்த்துகிறோம் ....
பாரக்கல்லாஹ் லக வ பாரக்க அலைக்க வஜமாஅ பைனக்குமா ஃபீஹைர் ....
அன்புடன்
அப்துல் கபூர் 
24.01.2018 ...
------------------------------------------------
மணமக்களுக்கு அல்லாஹ் அனைத்து வளமும் தந்தருள அல்லாஹ்விடன் இறைஞ்சி வாழ்த்துகின்றேன் .

அன்புள்ள அண்ணா
( ராஜா வாவுபிள்ளை )
கடந்த சில நாட்களாக உங்கள் ஊர் நினைவுத்தான் .
அண்ணன் இங்கு மிகவும் குளிர் .ரயில் டிக்கட்டும் கிடைக்கவில்லை .திருமணதிற்கு வர மிகவும் விரும்பினேன் .வரமுடியவில்லை .திருமணத்தில் கலந்துகொள்வதுடன் அங்கு வருகைதரும் அன்பு நெஞ்சங்களை அரவணைத்து அளவளாவி மகிழவும் பேராவாளாய் இருந்தேன் கடந்த பல நாட்களாக அதன் நினைவுதான் .அல்லாஹ் தம்பதிகளுக்கு நீடித்த வாழ்வையும் அனைத்து வளமும் தந்தருள வாழ்த்துகின்றேன்
"பாரக்கல்லாகு லக வ பார்க்க அலைக்க வ ஜமஅ பைனகுமா பீ ஹைர்"
அல்லாஹ் அனைத்தையும் சிறப்பாக்கி வைப்பானாக .ஆமீன் .வாழ்த்துக்கள் அனைவருக்கும்
அன்புடன்
Mohamed Ali

No comments: