சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில் ,நகரில் பிரபல சைவ ஹோட்டலுக்கு சென்றுருந்தேன்.மசால் தோசைக்கு ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்தபோது பார்வை எதிர் சுவரில் வைத்திருந்த அறிவிப்பு பலகையில் பதிந்தது!
Our Staff do not accept tips !
என்று ஆங்கிலத்திலும்
இங்கு பணிபுரிவோர் அனைவரும் டிப்ஸ் வாங்கமாட்டார்கள் என்று தமிழிலும் எழுதப் பட்டிருந்தது!
ஆங்கிலத்தில் எழுதியிருந்த்து ஓகே!தமிழ் அறிவிப்புதான் கொஞ்சம் யோசிக்க வைத்தது.அனைவரும் டிப்ஸ் வாங்க மாட்டார்கள் என்றால் என்ன பொருள்?ஒருசிலர் அல்லது கொஞ்சம்பேர் மட்டும்தான் டிப்ஸ் வாங்குவார்கள்,மற்றபடி அனைவரும் வாங்க மாட்டார்கள் என வருகிறதே!ஆக அறிவிப்பில் சொல்ல வந்த விஷயம் சரியாகச் சொல்லப்படவில்லை எனத் தோன்றியது.
உண்டுமுடிந்தபின் பில் வாங்கிக் கொண்டு கல்லாவில் சென்றேன்.உரிமையாளர்(ரெட்டியார்)நமக்கு பழக்கமானவர்தான்.
அவரிடம்,ஏங்க நாகர்கோவில் நகரில் உள்ள அனைவரும் உங்க ஹோட்டலில் சாப்பிட வருவார்களா எனக் கேட்டேன்!
என்ன மாமா அப்டிக் கேக்கிறீங்க?நாகர்கோவிலில் உள்ளஅனைவரும் இங்க வரமாட்டாங்க!நமக்குத் தெரிஞ்சவங்க
அக்கம்பக்கம் உள்ளவங்க ,பயணிகள் என்றுபலரும் வருவாங்கதானே?
அதேதான்.இங்கு அனைவரும் டிப்ஸ் வாங்கமாட்டாங்கண்ணா
ஒருசிலபேர் மட்டும்தான் வாங்குவாங்க மத்தவங்க வாங்கமாட்டாங்க அப்படீண்ணு அர்த்தம் வருதே என்றேன்!அவர் சிரித்துக் கொண்டே மாமா சரியான தமிழ் பண்டிதர்போல என்றார்!நானும் இங்கு சிப்பந்திகள் யாரும் டிப்ஸ் வாங்கமாட்டார்கள் என்று திருத்தி எழுதுங்கள் என்றபடி வந்தேன்!
HINDU பத்திரிகையை வழமையாகப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் படித்த ஒரு விடயமும் நினைவுக்கு வந்தது.
Punctuation mark களைச் சிறிது மாற்றுப் போட்டால் பொருளே தலைகீழாக மாறிவிடும் என்று தெரிந்துகொண்டது அது.
King Luious XIV declared,"Poet Byron is a bastard".
"King LuiousXIV" declared Poet Byron,"is a bastard".
பொருளே தலைகீழாக மாறிவிட்டது!
ஒரே ஒரு எழுத்து மாற்றி உச்சரித்ததால் மாநகர் மதுரையே நெருப்புக்கிரையான கதையும் நாமறிந்ததுதானே!
பாண்டியன் நெடுஞ்செழியன்
"கள்வனைக் கொண்டச் சிலம்பினைக் கொணர்க"
கள்வனாகிய கோவலனையும் கொண்டு அச்சிலம்பினையும் கொண்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தால் சிலப்பதிகாரமே இல்லையே!
ஆனால் அவன் சொன்னது
"கள்வனைக் கொன்றச் சிலம்பினைக் கொணர்க" என்று!!!
Noor Mohamed
No comments:
Post a Comment