17 ஆண்டுக்கு முன் குடும்பத்தைவிட்டு பிரிந்த மகன் மீண்டும் தனது பெற்றோருடன் இணைந்த போது, அங்கு தன் பெயரில் மற்றொருவர் மகனாக வாழ்ந்து வருவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தெலுங்கு திரைப்படங்களில் வருவதைப் போல் சிறுவயதில் தொலைந்துபோய், இளம் வயதில் பெற்றோருடன் சேருவதைப் போல் இருந்தாலும், சில திருப்பங்களுடன், மிகவும் ருசிகரமாக உண்மையில் நடந்த சம்பவமாகும்.
இந்த சம்பவத்தை இந்த கதையில் வரும் குடும்பத்தாரின் உறவினர் ராம்பிரசாத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் சிக்காகோ நகரில்வசித்து வருகிறார்.
அவர் கூறியதாவது:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளி அருகே இருக்கும் கிராமம் மந்தளவரிப்பள்ளி. இந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் ரகுநாத ரெட்டி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2000ம் ஆண்டில் ரகுநாத ரெட்டியின் 11-வயது மகன் திடீரென வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.
தனது மகனை ரகுநாத ரெட்டி பல இடங்களில் தேடியும், பல ஆண்டுகளாக முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு ரகுநாதரெட்டியும், அவரின் மனைவியும் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்புகையில், தனது தொலைந்து போன மகனின் சாயலில், ஹோட்டலில் பதின் பருவ வயது சிறுவன் ஒருவரைப் பார்க்கிறார்கள்.
மேலும் படிக்க 17 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த மகன்; தன்னுடைய பெயரில் மற்றொருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி: சினிமாவை மிஞ்சும் ருசிகரம்
நன்றிhttp://tamil.thehindu.com/
No comments:
Post a Comment