பாதை நெறிகளைப் பின்பற்றும்
பாதசாரிகளின் கண்களில்
உத்திரத்தில் மாட்டிவிடப்பட்ட
ஊனக் கிளிகளின் காட்சிகள்
ஒட்டிக் கொண்டு தொங்கும்.
மேற்படிப்பு தொடங்க
கிளிகளின் படபடப்பு
அவாவின் பாடமானது.
பகலின் குரல்கள் முடங்கியதும்
முயற்சிகளின் கண்விழிப்போடு
ஊன்றிப் படிக்க
தூர ஊர்களின்
மாடவீதிகள் வரவேற்கும்.
கழித்த இரவுகளில்
கற்றதின் பயனாய்
அடைப்பட்ட கதவுகள்
என்னுள்ளே பல திறக்கும்.
கூண்டுக்குள் சுற்றிச் சுற்றி
விழிகளை நெரித்து
அவதாரம் கொண்ட பூமியை
வலிக்கொண்டுப் பார்க்கும் நாழியிலும்
உருவைத் திருவாய் காட்டும்
அதன் வித்தைகளோ ஆயிரம்!
விரைந்து போய் பக்கம் பக்கமாய்
புரட்டிப் புரட்டி
படித்தப் படிப்பு நிலையுயர
கால்கள் கட்டுக்குள் என்றானது!
*
Taj Deen
No comments:
Post a Comment