Saif Saif
குழந்தையின் பசியறிந்து பால் புகட்டும் தாய்...♥
வயிறு நிறைந்ததும் தாயை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் குழந்தை..♥
மகனின் மன வாட்டம் கண்டு தலையை கோதி மார்போடு அணைக்கும் தந்தை..♥
பரிவோடு தந்தையை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தும் தனயன்..♥
கணவனின் குணம் அறிந்து நயமாகப் பேசும் மனைவி..♥,
மனைவியின் நிலை தெரிந்து பக்குவமாக நடந்து கொள்ளும் கணவன்.♥
தம்பியின் ஆசையை ஆவலோடு நிறைவேற்றும் அண்ணன்..♥
அண்ணனின் பாசத்தால் கண்டுண்டு கிடக்கும் தம்பி..♥
கலங்கி நிற்கும் நண்பனின் நிலை கண்டு ஆறுதல் சொல்லும் தோழன்.♥
தோழனின் தேற்றலினால் மனம் தெளிந்து முறுவலிக்கும் நண்பன்..♥
தொழிலாளியின் தேவையை கேட்காமலேயே நிறைவேற்றி வைக்கும் முதலாளி.♥
முதலாளியின் ஆர்வத்தை சொல்லாமலேயே பூர்த்திச்
செய்யும் தொழிலாளி..♥
இந்த புரிதல்கள் சுகமாகும் போது
கருணையோடு பார்க்கும் இறைவனின் பார்வையும் நெகிழ்ச்சியாய் வருகிறது..
அந்த நெகிழ்ச்சியான பார்வையில் ஆயிரம் புரிதல்கள்..
அந்த புரிதல்களின் அர்த்தங்கள் அந்த அடியானோடு ஐக்கியமாகிறது..
அவன் உள்ளம் அவனையறியாமல் இறைவனை துதிக்கிறது...
#அல்ஹம்துலில்லாஹ்.♥
Saif Saif
No comments:
Post a Comment