தெற்கு சூடான் ....
Abdul Gafoor
இனியவர்களேஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
உகாண்டா எல்லைப் பரப்பு முடியும் பகுதிகளின் கதவுகளை திறந்தால் தென்படும் சில ஆப்பிரிக்க நாடுகளின் பாதைகளில் தெற்கு சூடானும் உள்ளடங்கும் ...
சில ஆண்டுகளுக்கு முன்னர் சூடானிலிருந்து தனி நாடாக பிரகடணம் செய்யப்பட்டு இரு பெரும் கட்சிகளின் அதிகாரப் பங்கீட்டில் ஆட்சி நடைபெறும் தேசம் தெற்கு சூடான் என்பதை பெரும்பாலோர் அறிவோம் ....
ஓரளவு சீரமைப்பும் புழுதியும் பரவும் ஜூபா மற்றும் ஏயீ நகரங்களில் கோட்டாறு இடலாக்குடியிலிருந்து வாழும் 25 சகோதரர்களையும் சேர்த்து 220 இந்தியர்கள் தொழில் செய்தும் பணியாற்றியும் சகஜமாக வாழ்ந்து வருகிறார்கள் ...
நமது குடும்பங்களை முன்னேற்றும் பொருளாதாரத்தை ஈட்டுவதற்கு இறைவன் வரங்கள் வழங்கிய ஆப்பிரிக்க தேசங்களில் கலவரங்கள் துவங்கும் தருணங்களை யாரும் கணிக்க இயலாது ....
தெற்கு சூடானில் நோன்பு பெருநாள் வரை நிலவிய சாதாரண சூழல் திடீரென அசாதாரண சூழலாக மாறி ஆட்சி புரியும் இரண்டு இனங்களுக்கும் சண்டை மூண்டு எப்போது தீரும் என்கிற அச்சத்தில் நீண்டு கொண்டிருக்கிறது .....
15 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆங்காங்கேயுள்ள குடியிருப்புகளில் வசித்து வருவோரின் வீடுகளுக்கு பக்கத்தில் குண்டுகள் வீசி புகை பரவிய சூழ்நிலையால் நம்மவர்கள் உடல் நடுங்கியும் குடல் கலங்கியும் வசித்திடும் செய்திகளை கேட்டதும் படங்களை வாட்ஸப்பில் பார்த்ததும் நம்மையும் வேதனை கவ்வுகிறது ...
இந்தியத் தூதரகம் நம்மவர்களுக்கு பாதுகாப்பு அறிவிப்பு செய்து கட்டுபடுத்த முடியாத நிலையில் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல முனைகிறது ....
முகநூல் நண்பர்களே நாமும் தெற்கு சூடானில் பாதிக்கப்பட்ட நமது சகோதரர்களுக்கு அமைதி நிழல் பரவும் சூழல் உருவாக வல்ல இறைவனிடம் துவா செய்வோம் ....
இன்ஷா அல்லாஹ் ...
அன்புடன்
அப்துல் கபூர்
12.07.2016 ....
Abdul Gafoor
No comments:
Post a Comment