அண்மையில் சகோ. Jiyavudeen Mohamed ஒரு நிலைத்தகவல் எழுதியிருந்தார்.
//"விடுமுறையில் ஊர் வந்ததும் செருப்பில்லாமல் வாசலைவிட்டு இறங்கவே தயக்கம் காட்டிய (ரியாத் சிட்டியில் வாழ்க்கையை ஓட்டிய) பிள்ளைகள் இரண்டு நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு, ஆசை ஆசையாய் மண்ணில் உருண்டு பிறண்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்."// என்று சொல்லியிருந்தார்.
இதிலென்ன வியப்பு என்கிறீர்களா?
வியப்பு விளையாட்டில் இல்லை. விசயத்தில் தான்.
பொதுவாக பிள்ளைகள் வெளியில் புரண்டு விளையாடுவதையோ, இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் விரல் சூப்புவதைத் தொடர்ந்தாலோ,
நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாகவோ இருந்தால் பெற்றோர்கள் பெரிதும் கவலைப்பட்டு வந்திருக்கிறோம். இன்னும் சில இரக்கமற்ற பெற்றோர்கள் விரலில் சூடு வைக்கும் அளவிற்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம் இல்லையா?
கவலையே படவேண்டாம் என்கிறது சமீபத்தில் படித்த அறிவியல் ஆராய்ச்சியின் முடிவு. ஆம், இதுவரை 'கெட்ட பழக்கம்' என்று நம்மால் கூறப்பட்டு வந்த விரல் சூப்பும் பழக்கம், நகம் கடிக்கும் பழக்கம், மண்ணில் விளையாடும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு 'அலர்ஜி' எனும் ஒவ்வாமை (பிற்காலங்களில்) ஏற்படுவது மிகவும் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.
அதற்காக இந்தப் பழக்கங்களை ஊக்குவிக்கவும் வேண்டாம்; ஒரேயடியாக உட்கார்ந்து கவலைப்படவும் வேண்டாம் என்கிறது அந்த ஆராய்ச்சி அறிக்கை!
- Rafeeq Sulaiman
No comments:
Post a Comment